அற்புதமான 5 U-19 கேப்டன்கள்
சர்வதேச அளவில் தங்களது இளமை காலத்திலேயே நன்றாக ஆடி 19 வயதிற்க்குட்ப்படோருக்கான அணியில் இடம் பிடித்து பின்னர் சீனியர் அணியில் கலக்கிய அதி அற்புதமான வீரர்களும் உள்ளனர். முன்னர் நன்றாக ஆடினாலும் நாட்டிற்க்காக தொடர்ச்சியாக ஆட முடியாமல் தவித்து வருபவர்களும் இருக்கின்றனர். யுவராஜ் சிங், விராத் கோலி, இன்சமாம் உல் ஹக், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் அந்த இளம் அணியில் ஆடிய அற்புதமான வீரர்கள் ஆவர்.
தற்போது இந்தியாவின் அற்புதமான 5 U-19 கேப்டனகளை காண்போம்.
5.இசான் கிசான்
2016ல் இந்திய அண்டர்19 அணி வங்க்தேசத்தில் உலககோப்பை விளையாடியது. அந்த அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கேப்டன் இசான் கிசான். இவர் அந்த உலககோப்பையில் அவ்வளவாக ஜொலிக்காத பட்சத்திலும் கடந்த ஐ.பி.எல் தொடரில் கடைநிலை ஆட்டக்காரராக ஜொலித்தார் இசான் கிசான். 11 போட்டிகளில் விளையாடிய அவட் 277 ரன் குவித்தார். இதில் அவ்ரது ஸ்ட்ரைக் ரேட் 134 ஆகும்.
4.பர்த்திவ் படேல்
2002ல் இந்திய அண்டர்19 அணியின் கேப்டன் குஜராத் வீரர் பர்த்திவ் படேல். இந்திய அணி அந்த உலககோப்பையில் அரையிருதி போட்டியில் தென்னாப்பிரிக்கவிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும், தனது 17 வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தர் பர்த்திவ் படேல். இவர் தான் உலகின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் . ஆனாலும் தோனியின் வருகைக்குப் பின் இவரால் இந்திய அணியில் தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை.
இருப்பினும் உள்ளூர் போட்டிகளின் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது தலைமையிளான குஜராத் அணி கடந்த ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
3.அம்பட்டி ராயுடு
2002ல் இந்திய அண்டர்19 அணி இங்கிலாந்தில் பயணம் செய்து விளையாடி போது தனது தொடக்க போட்டியிலேயே 177 ரன் அடித்து அனைவரின் பார்வையையும் தனது பக்கம் திருப்பினார் அம்பட்டி ராயுடு. அப்போது இந்திய அணியின் வாரீசாக பார்க்கப்பட்ட இவர் அதன் பின் நல்ல ஃபார்ம் இருந்தும் காணாமல் போனார்.
2004ல் இந்திய அண்டர்19 அணி கோப்பை இவரது தலைமையில் உலகக்கோப்பை வென்றது. தற்போது இந்திய அணியில் இல்லையேன்றாலும் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடி வருகிறார்.
2.முகமது கைப்
2002ல் இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் ஹீரோ இவர். இவரது தலைமையில் தான் அண்டர்19 அனியில் யுவராஜ் சிங் ஆடினார். மேலும், இந்திய அண்டர்19 அணி முதன் முதலாக 2000மாம் ஆண்டு இவரது தலைமையில் தான் உலகக்கோப்பை வென்றது.
2003 சீனியர் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது. அந்த அணியில் முக்கியமான பங்கு இவருக்கும் உண்டு. தொடர்ச்சியாக நன்றாக விளையாடாததால் இந்திய அணியில் இருந்து கல்ட்டி விடப்பட்டார் முகமது கைப்.
இந்தியாவிற்க்காக 13 டெஸ்ட் போட்டிகளில் 624 ரன்னும், 125 ஒரு நாள் போட்டிகளில் 2753 ரன்னும் அடித்துள்ளர்.
1.விராத் கோலி
இந்தியாவின் மிகச்சிறந்த அண்டர்19 கேப்டன் விராத் கோலி. இந்திய சீனியர் அணியின் கேப்டனும் இவர் தான். டெஸ்ட், ஒரு நாள் , டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் இவர் தான் கேப்டன். இவர் தலைமையில் தான் இந்திய அண்டர்19 அணி 2008ல் இரண்டாவது முறையாக உலகக்கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.