#2.முதல் மூன்று வீரர்களின் 1,1,1
இந்திய அணி செமி பைனல் வரை வருவதற்கு காரணம் டாப்-3 வீரர்கள் ஆவர். விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அபாரமாக ஆடி இந்திய அணியை இதுவரை அழைத்து வந்தனர். ஆனால் சரியான நேரத்தில் இந்த போட்டியில் மூவரும் ஒற்றை இலக்கங்களுக்கு தலா ஒரு ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மூவரும் சேர்ந்து 50 முதல் 60 ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்திய அணி இந்த போட்டியை எளிதாக வென்று இருக்கும்.