#3.கேன் வில்லியம்சனின் அற்புதமான கேப்டன்சி
எதிர் அணி கேப்டன் ஆன கேன் வில்லியம்சனை குறைத்து மதிப்பிட முடியாது. அவரது கேப்டன்சி இந்த போட்டியில் அற்புதமாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் 240 ரன்கள் இருந்தால் போதும் வெற்றி பெற்று விடலாம் என சரியாக கணித்து உள்ளார் அவர்.
இதன் காரணமாக அந்த ரன்னை வைத்து தனது வீரர்களை அற்புதமாக வழிநடத்தினார். குறிப்பாக தனது துவக்க பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் 14 ஓவர்கள் வரை வீச அனுமதித்தார். இதன் காரணமாக இந்திய அணி ஒவ்வொரு ரன் எடுக்கவும் கடுமையாக திணற வேண்டியிருந்தது.