#5.ஜாம்பவான் தோனியின் ஒரே ஒரு தவறான ஓட்டம்
வேறு வழியில்லை இதனை இங்கு இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் அடிக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர் அணியில் மீதமிருந்த பந்து வீச்சாளர்களுக்கு அவ்வளவு பலம் இல்லை. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ட்ரென்ட் போல்ட், மேட் ஹென்ரி இருவருக்கும் ஓவர்கள் தீர்ந்துவிட்டது. தற்போது வீசப்போவது ஓரளவிற்கு சுமாரான பந்துவீச்சாளர்கள் தான். இதனால் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தோனி 49 ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி சம்பவத்தை துவக்கினார்.
MOMENT! A @Martyguptill runout to remove dangerman Dhoni! #INDvNZ #BACKTHEBLACKCAPSpic.twitter.com/ylSdAaDsB3
— BLACKCAPS (@BLACKCAPS) July 10, 2019
ஆனால் இரண்டாவது பந்து சரியாக கணித்து அடிக்காத தோனி பந்தை பார்க்காமல் ஓடினார். வழக்கம்போல் நமது பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர்களாக எதிர்முனையில் இருந்ததால் தானே ஸ்ட்ரைக்கை எடுத்துக் கொள்ள நினைத்தார். இது அவரது வழக்கமான யுக்திதான்.
இது சரியான முடிவுதான், ஆனால் இந்த நேரத்தில் மிகவும் தவறாக முடிந்து விட்டது. ஏனெனில் பந்தை சரியா கணித்து அடிக்காமலும், பந்து எங்கே சென்றது என தெரியாமலும் முதல் ரன் ஓடும்போதே சற்று தடுமாறித்தான் ஓடினார் தோனி. இருந்தும் மிக வேகமாக ஓடி விட்டு மின்னல் போல் மீண்டு திரும்பி ஓடி வந்த தோனி ஒரு இன்ச்-இல் ரன் அவுட் ஆனார் . இந்த ரன் அவுட் தான் உலகின் பல கோடி இதயங்களை சுக்குநூறாக உடைத்து விட்டது
உங்களுக்கு தெரிந்த சரியான காரணங்களை கீழே தமிழில் பதிவிடுங்கள் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?