இந்த கிரிக்கெட் உலகத்தில் மகேந்திர சிங் தோனியும் சிறந்த கிரிக்கெட் வீரர் தான். விக்கெட்-கீப்பர் என்றாலே மகேந்திர சிங் தோனி தான், விக்கெட்-கீப்பிங் மட்டும் இல்லாமல் பேட்டிங், கேப்டன்சி என அனைத்திலும் இவர் தான் கெத்து.
பேட்டிங், கேப்டன்சி, விக்கெட்-கீப்பிங் என அனைத்திலும் இவர் தன் 100 சதவீதத்தையும் தருவார். கிரிக்கெட் மைதானத்தில் இவர் எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல், அமைதியாகவே இருப்பார்.
அவரது கிரிக்கெட் வரலாற்றில் அவர் பல சாதனைகளை படைத்திருக்கிறார். அதில் சில சாதனைகள் யாராலும் தொட முடியாத சாதனைகள். அந்த சாதனைகளை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
7வது இடத்தில் இறங்கி ஒரு ஒருநாள் சதத்திற்கு மேல் அடித்த ஒரே வீரர்
ஒருநாள் போட்டிகளில் 7வது இடத்தில் இறங்கு சதம் அடிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் அவர்களுக்கு சதம் அடிக்க போதிய பந்துகள் கிடைக்காது, அப்படியே கிடைத்தால் கூட அவர்களுக்கு பிரஷர் இருக்கும் நேரத்தில் தான் கிடைக்கும்.
இதுவரை, 7வது அல்லது அதற்கும் கீழ் இறங்கி 14 வீரர்கள் சதம் அடித்துள்ளனர். ஆனால், தோனி மட்டும் தான் அதை இரண்டு முறை செய்துள்ளார். மற்ற 13 வீரர்கள் ஒரு முறை தான் சதம் அடித்துள்ளனர்.
அதில் ஒரு முறை ஆசியா அணிக்காக ஆப்பிரிக்கா XI அணிக்கு எதிராகவும், இன்னொரு முறை இந்திய அணிக்காக பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் அடித்துள்ளார்.
விக்கெட்-கீப்பராக விளையாடி அதிக முறை சர்வதேச போட்டிகளில் பந்து வீசியவர்
விக்கெட்-கீப்பர்கள் பந்துவீச மாட்டார்கள். அவர்கள் ஆடி அம்மாவாசைக்கு ஒரு முறை தான் பந்துவீசுவார்கள். தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், 9 இன்னிங்சில் தோனி பந்துவீசி இருக்கிறார். விக்கெட்-கீப்பராக விளையாடி டெஸ்டில் 7 இன்னிங்சிலும், ஒருநாள் போட்டிகளில் 2 இன்னிங்சிலும் பந்து வீசி இருக்கிறார்.
இந்த பட்டியலில் அடுத்த படியாக முன்னாள் இங்கிலாந்து அணியின் விக்கெட்-கீப்பர் பில் ஸ்டாரர் இருக்கிறார். அவர் விக்கெட்-கீப்பராக விளையாடி, 4 இன்னிங்சில் பந்து வீசி இருக்கிறார்.
ஐசிசி தொடரில் விக்கெட்-கீப்பராக விளையாடி விக்கெட் எடுத்த ஒரே வீரர்
விக்கெட்-கீப்பராக விளையாடி, ஐசிசி தொடரில் ஒரு விக்கெட் எடுத்த ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி தான். 2009-இல் தென்னாபிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியின் போது டிராவிஸ் டவுளின் விக்கெட்டை எடுத்தார் தோனி.
சொல்ல போனால், ஐசிசி தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடி பந்து வீசிய ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி தான்.
3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன்
மூன்று விதமான ஐசிசி தொடர் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். அவரது கேப்டன் பயணத்தில், 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறார். மற்ற கேப்டன்கள் யாரும் 2 விதமான ஐசிசி கோப்பைக்கு மேல் வென்றதில்லை.
விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனாக அடித்த அதிக ஸ்கோர்
ஒருநாள் போட்டிகளில் விக்கெட்-கீப்பராக இருந்து அதிக ஸ்கோர் அடித்த வீரர் தல தோனி தான். 31 அக்டோபர் 2005-இல் இலங்கைக்கு எதிராக 183 ரன் விளாசி அசத்தினார். இது தான் இன்றும் விக்கெட்-கீப்பர் அடித்த ஸ்கோராக இருக்கிறது.