போர்ப்ஸ் 2017 : விராட் மேலே, தோனி கீழே, ரோகித் இன்னும் கீழே !! 1

2017 ஆம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியிலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ. 100.72 கோடி வருமானம் ஈட்டி முதல் இடத்தை பிடித்துள்ளார்.போர்ப்ஸ் 2017 : விராட் மேலே, தோனி கீழே, ரோகித் இன்னும் கீழே !! 2

அத்துடன் இந்திய அளவில் அதிக வருமானம் ஈட்டியுள்ள பிரபலங்கள் பட்டியலில் கோலி 3 ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் ரூ. 232.8 கோடியும், ஷாரூக் கான் ரூ. 170.5 கோடியும் சம்பாரித்து முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இதே மூன்று பேர் கடந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.Cricket, India, Virat Kohli, Aamir Khan

இந்த ஆண்டு சல்மான் கான் மற்று ஷாரூக் கான் ஆகியோரின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், கோலியின் வருமானம் அதிகரித்துள்ளது. வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கோலிக்கு அடுத்த இடத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் (ரூ.82.50 கோடி) உள்ளார். மூன்றாம் இடத்தில் தோனி (ரூ.63.77 கோடி), நான்காம் இடத்தில் பி.வி.சிந்து (ரூ.57.25 கோடி) ஆகியோர் உள்ளனர்.

2017ஆம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டியுள்ள 21 இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியல்: 

  1. விராட் கோலி ரூ. 100.72 கோடி
  2. சச்சின் டெண்டுல்கர் ரூ. 82.50 கோடி
  3. எம்.எஸ்.தோனி ரூ. 63.77 கோடி
  4. பி.வி.சிந்து ரூ. 57.25 கோடி
  5. ஆர்.அஸ்வின் ரூ. 34.67 கோடி
  6. ரவீந்திர ஜடேஜா ரூ. 34.58 கோடி
  7. சாய்னா நேவால் ரூ. 31.00 கோடி
  8. ரோஹித் சர்மா ரூ. 30.82 கோடி
  9. ஷிகர் தவான் ரூ. 15.94 கோடி
  10. அனிர்பன் லாஹிரி ரூ. 12.44 கோடி
  11. யுவராஜ் சிங் ரூ. 11.60 கோடி
  12. கே.ஸ்ரீகாந்த் ரூ. 6.13 கோடி
  13. ஏ.ரஹானே ரூ. 5.56 கோடி
  14. சி.புஜாரா ரூ. 5.48 கோடி
  15. முரளி விஜய் ரூ. 4.20 கோடி
  16. கே.எல்.ராகுல் ரூ. 4.04 கோடி
  17. உமேஸ் யாதவ் ரூ. 3.94 கோடி
  18. ஹர்திக் பாண்டியா ரூ. 3.04 கோடி
  19. சானியா மிர்சா ரூ. 2.80 கோடி
  20. புவனேஷ்வர் குமார் ரூ. 2.53 கோடி
  21. சுனில் சேத்ரி ரூ. 2.30 கோடி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *