2011 ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வெல்ல பெரும் காரணமாக இருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு அணிக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் கார்டிப் நகரத்தை மையமாகக்கொண்ட ‘தி ஹன்ரெட்’ என்ற ஒரு அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணிக்கு தற்போது பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கேரி கிர்ஸ்டன். மேலும் தற்போது இந்திய அணிக்கும் பயிற்சியாளர் வேட்டை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிலிருந்து விலகி இங்கிலாந்தில் உள்ள ஒரு அணிக்கு பயிற்சியாளராக சேர்ந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஒரு இழப்பாகவே கருதப்படுகிறதுசற்று முன்: இந்தியாவிற்கு உலககோப்பை வென்று கொடுத்த கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக நியமனம்!! 1

இங்கிலாந்தில் ‘ஹன்ரெட்’ என்னும் ஒரு கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளது. இதில் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களும் முன்னணி கிரிக்கெட் பயிற்சியாளர்களும் பங்கு கொள்வார்கள் என்று தெரிகிறது. தற்போது கேரி கிறிஸ்டன் கார்டிப் அணிக்கும் வார்னர் ‘லார்ட்ஸ் ஹன்ரெட்’ அணிக்கும் ஜெயவர்த்தனே மற்றொரு அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட போவதாக தெரிகிறது .

கேரி கிர்ஸ்டன் ஏற்கனவே இந்தியாவின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக அந்த அணியில் இவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எப்படிப்பார்த்தாலும் அவர் பிசிசிஐயின் விதிப்படி இந்தியாவிற்கு பயிற்சியாளராக முடியாது.சற்று முன்: இந்தியாவிற்கு உலககோப்பை வென்று கொடுத்த கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக நியமனம்!! 2

இந்நிலையில், இந்திய பயிற்சியாலர் பதவிக்கு 2000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து , ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசி லாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன், தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன், இலங்கையின் ஜெயவர்த்தனே, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். இதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

தலைமை பயிற்சியாளர் தேர்வு வரும் 16 ஆம் தேதி நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். • SHARE

  விவரம் காண

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபைக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...

  தோனி 2023 உலககோப்பையிலும் ஆடுவார்: முன்னாள் வீரர் திடுக் தகவல்

  கிரெக் சாப்பல் பயிற்சி காலத்தில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது, அதில் ஒருவர்தான் இந்த ஆந்திரா வீரர் வேணுகோபால் ராவ். ஆந்திராவில் உள்ள...

  இந்திய இளம் வீரர்கள் நன்றாக ஆட இதுதான் காரணம்: அப்ரிடி ஓப்பன் டாக்

  சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை இளம் இந்திய வீரர்கள் சமாளித்து மீண்டு வர அவர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் துணைபுரிகிறது என்று பாகிஸ்தான் ஆல் ரவுண்டர்...

  பவுண்டரிக்கு அடிக்க வேண்டிய பந்தை கட்டை வைக்க கூடாது: புஜாராவிற்கு மறைமுக அட்வைஸ் கொடுத்த கோலி

  வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து விமர்சனங்களை கோலி எதிர்கொண்டு வருகிறார். நியூஸிலாந்து நெருக்கமான களவியூகம் அமைத்து நீண்ட நேரம் ஒரே...

  வீடியோ: பந்தை சேதப்படுத்திய பாக். வீரர்! மைதானத்திலேயே தட்டிக்கேட்டஜேசன் ராய்!

  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 என்றாலே எப்போதும் சர்ச்சைகள்தான் ஒன்று சூதாட்ட சர்ச்சை கிளம்பும் அல்லது வீரர்கள் பந்தைச் சேதம் செய்த சர்ச்சைக்...