யோ-யோ தேர்விற்கு பாஸ் மார்க் 16.1என்பது அதிகம் – இந்திய அணியின் முன்னாள் பிட்னஸ் கோச்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சர்வேத போட்டிகளில் விளையாட யோ-யோ எனப்படும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா வெகு நாட்களாக போராடி தோல்வி அடைந்து வந்தனர்.
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. இதில் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2018 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு ஆகியோர் இடம்பிடித்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து அம்பதி ராயுடு இந்திய அணியில் இடம்பெற்றார்.

இதையடுத்து நடத்தப்பட்ட யோ-யோ தேர்வில் டோனி, கோலி, ரெய்னா உள்ளிட்டோர் தேர்ச்சி அடைந்து அணியில் இடம்பிடித்தனர்.
ஆனால் யோ-யோ தேர்வில் அம்பதி ராயுடு தோல்வி அடைந்ததால் இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனால் இந்த வாய்ப்பு சுரேஷ் ரெய்னாவுக்கு கிடைத்தது. இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பிட்னஸ் கோச் ஜான் க்ளோஸ்டர் கூறியதாவது,
இந்த யோ-யோ உடல் தகுதி தேர்விட்கு பாஸ் மார்க் 16.1 என் வைத்துள்ளது அதிகம். ஏனெனில், 16.1 என்றால் உடலை நன்றாக வளைப்பது, வலைத்துக்கொண்டே ஓடுவது, குறையந்த நேரத்தில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் பிட்னஸ் இருக்க வேண்டும்.
டி20 போட்டிகளுக்கு வேண்டுமானால் 16.1 வைத்துக்கொள்ளலாம். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு 16.1அதிகம் என கூறியுள்ளார் ஜான் க்ளோஸ்டர்

மேலும், யோ-யோ தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கென்யா அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சப்தீப் பட்டேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க இரண்டு இன்னிங்சுகள் வழங்கப்படுவது போல யோ-யோ தேர்விலும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஒரு வீரர் அந்த தேர்வில், தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருக்கு சிறிது நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ மீண்டும் அடித்த வாய்ப்பை கொடுங்கள். 

அம்பதி ராயுடு யோ-யோ தேர்வில் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூர் போட்டிகளில் ஆண்டு முழுவதும் சிறப்பாக விளையாடிய அவரது திறைமையை, அரை மணி நேரம் தேர்வு மூலம் எப்படி கணக்கிடுவீர்கள். அதை வைத்து அவரை அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்?. இப்படி வீரர்களை நீக்காதீர்கள், என அவர் கூறியுள்ளார்.