முன்னாள் பாகிஸ்தான் வீராங்கனை சர்மீன் கான் உயிரிழப்பு!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீராங்கனையான சர்மீன் கான் வியாழக்கிழமை காலை இயற்கை எய்தினார். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. பாகிஸ்தான் ரிப்போர்ட்டின் படி அவருக்கு நுரையீரல் அழற்சி நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இருந்து திரும்பி வரும் வேளையில் அந்த நோயின் தாக்கம் அதிகமாகி தனது உயிரை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான்மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இவர் பெரும் பங்கு வகித்தார். அவரும் அவரது தங்கையும் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆண்கள் அணி லார்ட்ஸ் மைதானத்தில் உலக கோப்பையை வென்றது இதனை பார்த்த இருவருக்கும் கிரிக்கெட்டில் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது.
அடுத்த 3 வருடத்தில் நன்றாக முயற்சி செய்து பாகிஸ்தான் மகளிர் அணியில் நுழைந்தனர் பின்னர். 1996ம் ஆண்டு இவர்களது தீவிர முயற்சியால் பாகிஸ்தான் மகளிர் அணி ஐசிசியில் முழுமையான ஒரு மெம்பர். ஆனது அதன் பின்னர் 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் மகளிர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெற்றது.
மேலும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு இந்த இருவரின் தந்தை மற்றும் மிகப் பெரும் தொழிலதிபர் ஸ்பான்சர் செய்தார். ஒரு வருடம் கழித்து சர்மீன் கான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கெதிராக கொழும்புவில் 1998ஆம் ஆண்டு ஆடினார்.
அதன் பின்னர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டு வருடம் கழித்து அயர்லாந்து அணிக்கெதிராக ஆடினார்.1997 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார். பின்னர் ஐந்து வருடம் கழித்து 2002ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஆடினார். மொத்தமாக சர்மீன் கான் இரண்டு டெஸ்ட் போட்டிகள் 26 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
ஐந்து வருட காலகட்டத்தில் இவர் பாகிஸ்தான் மகளிருக்காக பல முயற்சிகளை எடுத்து முன்னேறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டும் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். திடீரென இயற்கை எய்திவிட்டார் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.