டி20 லீக் தொடரில் மேட்ச் பிக்சிங்: மும்பை வீரர் அதிரடி கைது! 1

கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேட்பன் உள்பட 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கர்நாடக பிரீமியர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.

இதுவரை 8 சீசன்களாக நடைபெற்றுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடரின் இறுதி போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

டி20 லீக் தொடரில் மேட்ச் பிக்சிங்: மும்பை வீரர் அதிரடி கைது! 2
The Karnataka State Cricket Association (KSCA) runs the KPL T20 tournament every year on the lines of the popular Indian Premier League (IPL) tournament by the cash-rich Board of Control for Cricket in India (BCCI).

இந்த போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேபடன் சிஎம் கௌதம் 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டனின் மந்தமான ஆட்டமே தோல்விக்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

டி20 லீக் தொடரில் மேட்ச் பிக்சிங்: மும்பை வீரர் அதிரடி கைது! 3

கைது செய்யப்பட்ட சிஎம் கௌதம் மற்றும் அபர் காசி

இதையடுத்து இறுதி போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து பெங்களுர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில், கர்நாடாக பிரீமியர் லீக் தொடரில் மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கௌதம் மற்றும் அபர் காசி ஆகிய இரு வீரர்களை குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.டி20 லீக் தொடரில் மேட்ச் பிக்சிங்: மும்பை வீரர் அதிரடி கைது! 4

சூதாட்டப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிஎம் கௌதம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை, பெங்களுர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே பல்வேறு அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *