ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்! 1

தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

1959-ல் மெட்ராஸ் என்ற பெயரில் இருந்த போது தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக இவர் முதன் முதலாக அறிமுகமானார். 1974 வரை 94 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ளார்.

இவர் தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். 4061 ரன்களை 29.42 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 141 ரன்கள், 93 கேட்ச்களைப் பிடித்ததோடு 43 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

இவருடன் ஆடிய முன்னாள் தமிழக லெக் ஸ்பின்னர் வி.வி.குமார் கூறும்போது, “சுமார் 20 ஆண்டுகள் பெல்லியப்பாவுடன் ஆடியுள்ளேன். 60களில் இவர் ஒரு சிறந்த கேப்டன். இவர் தலைமையின் கீழ் பலதரப்பட்ட தொடர்களிலும் தமிழக அணி சிறப்பாக ஆடியது.

ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்! 2

இவர் ஒரு தைரியமான தொடக்க வீரர், நல்ல விக்கெட் கீப்பர், பவுலர்களுக்கு மதிப்பு மிக்க அறிவுரைகளை களத்தில் வழங்குவார். இவர் தானே உருவான ஒரு கிரிக்கெட் விரர். களத்திற்கு வெளியே உற்சாகமான இதயபூர்வமாக பழகக்கூடியவர்” என்றார்.

பெல்லியப்பாவுடன் ஆடிய அந்தக் கால தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பி.கல்யாண சுந்தரம் கூறும்போது, “நான் என் முதல் போட்டியை ஆடும்போது பெல்லியப்பாதான் கேப்டன். வீரர்களை நன்றாக ஊக்குவிப்பவர். ஒருமுறை எனக்கு உடல் நிலை சரியில்லாத பொது மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்டில் என்னை ஆட வைத்தார். 5 ஓவர்களை என்னை வீச வைத்து பிறகு ஓய்வு எடுக்குமாறு கூறினார், காரணம் இதன் மூலம் என்னை மாநில அணிக்குத் தேர்வு செய்ய முடியும் என்பதற்காக அவ்வாறு செய்தார்” என்றார்.ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்! 3

இன்னொரு முன்னாள் தமிழ்நாடு அணி விக்கெட் கீப்பர் பரத் ரெட்டி கூறும்போது, “என்னுடைய் இளம் பருவத்திலிருந்து அவரை அறிவேன் ஏனெனில் அவர் எங்களுக்கு அருகில்தான் குடியிருந்தார். ஹாரிங்டன் சாலையில் நாங்கள் அண்டை வீட்டார்கள். மிகவும் நல்ல மனிதர், அவரது கடைசி போட்டியில்தான் நான் என் முதல் ரஞ்சி போட்டியை ஆடினேன்.” என்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கு கூர்கில் நடைபெறுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *