நான்கு நாள் டெஸ்ட்: தினமும் 98 ஓவர்; பாலோ-ஆன் 150 ரன் 1

டிசம்பர் 26 அன்று தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நான்கு நாள் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான புதிய விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

நான்கு நாள் டெஸ்ட்: தினமும் 98 ஓவர்; பாலோ-ஆன் 150 ரன் 2
The ICC Test Championship Mace on display, Melbourne, January 4, 2009

நூறு வருடங்ளுக்கு முன்பு, அதாவது 1800களில் மூன்று நாள், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. உலக லெவன் அணியுடன் ஆஸ்திரேலிய 2005-ல் விளையாடிய டெஸ்ட் போட்டி, 6 நாள் டெஸ்டாக விளையாடப்பட்டது. அதற்கு அதிகாரபூர்வ அந்தஸ்தும் அளித்தது ஐசிசி (ஆனால் அந்த டெஸ்ட் போட்டி நான்கு நாளில் முடிவுபெற்றது.). பல வீரர்கள் 4 நாள் டெஸ்ட் போட்டியை ஐசிசிக்குப் பரிந்துரை செய்துள்ளார்கள். இதனால் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பது பலருடைய கணிப்பு.

நான்கு நாள் டெஸ்ட்: தினமும் 98 ஓவர்; பாலோ-ஆன் 150 ரன் 3
)

காலப்போக்கில் ஐந்து நாட்கள் முழுவதும் செலவழித்து டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் விரும்புவதில்லை. இதனால் ஒருநாள் போட்டிக்கு முக்கியத்தும் கொடுத்த ரசிகர்கள், தற்போது டி20 கிரிக்கெட்டிற்கு மாறி வருகின்றன. இதனால் பாரம்பரிய போட்டியாக கருதப்படும் டெஸ்டிற்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காலையில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளை பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆஸ்திரேலியா இதில் முன்னணியாக விளங்குகிறது. அந்த அணி அடிலெய்டில் பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தி வருகிறது.நான்கு நாள் டெஸ்ட்: தினமும் 98 ஓவர்; பாலோ-ஆன் 150 ரன் 4

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை அமல்படுத்த முன்வந்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம். டிசம்பர் இறுதியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் 4 நாள் டெஸ்ட் போட்டியை நடத்தவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. இது பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும். இந்திய அணியால் பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்கமுடியாததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2004-05-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடாததால் இதற்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.நான்கு நாள் டெஸ்ட்: தினமும் 98 ஓவர்; பாலோ-ஆன் 150 ரன் 5

2019 உலகக் கோப்பை போட்டி வரை 4 நாள் டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐசிசி அனுமதி தந்துள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கும் ஐசிசி அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான புதிய விதிமுறைகளை ஐசிசி வகுத்துள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்டின் காலஅட்டவணை:-

முதல் செசன் : மதியம் 1.30 மணி முதல் 3.45 மணி வரை

தேனீர் இடைவேளை: மதியம் 3.45 முதல் 4.05 மணி வரை

2-வது செசன் : 4.05 மணி முதல் மாலை 6.20 மணி வரை

இரவு சாப்பாடு இடைவேளை : 6.20 மணி மணி முதல் இரவு 7.00 மணி வரை

3-வது செசன் : இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை

அதன்படி நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ஒருநாளைக்கு 98 ஓவர்கள் வீசவேண்டும். ஐந்து நாள் டெஸ்டில் 90 ஓவர்கள் வீசினால் போதும்.நான்கு நாள் டெஸ்ட்: தினமும் 98 ஓவர்; பாலோ-ஆன் 150 ரன் 6

வழக்கமாக ஆறு மணி நேரம் டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆறரை மணி நேரம்.

ஃபாலோ ஆன் உண்டாக்குவதற்கு ஓர் அணி 200 ரன்கள் முன்னிலை பெறவேண்டும் என்பது அவசியமில்லை. இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி 150 ரன்கள் பின்தங்கியிருந்தால் அந்த அணி ஃபாலோ ஆன் பெற்றதாக அர்த்தம். போட்டியில் முடிவு எட்டப்படவேண்டும் என்பதற்காக இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுபோன்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான புதிய, முக்கியமான விதிமுறைகளை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே இடையிலான நான்கு நாள் டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *