விராட் கோலியினால் முடிவுக்கு வரவிருக்கும் 4 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை 1

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.  தற்போது முழு நேரமும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் விராட் கோலி செல்வதுதான் இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் அபாரமாக  வென்றுள்ளார். இதுபோன்ற பல வெற்றிகளின் பின்னால் சில சோகங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆம் விராட் கோலி இந்திய அணிக்கு தலைமையற்ற பின்னர் சில இளம் வீரர்களும் பல அனுபவ வீரர்களும் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளனர். அடுத்தது 7 தொடர்களைக் வென்று சாதனை படைத்துள்ளார்

அந்த வீரர்களின் பட்டியலை இப்போது காண்போம் :

1.கருண் நாயர்

தற்போது சரிசம வீதமாக அமைந்துள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது  இவருக்கு எட்டாவது காரியமாகவே சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுதான் இவர் முச்சதம் அடித்து  சாதனை படைத்தவர். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது இந்த முச்சதம்   அடித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். ஆனாலும் அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்து ரஹானே விற்கு வழிவிடும் வகையில் கழற்றி விடப்பட்டார் கருண் நாயர்.

Cricket, Abhinav Mukund, Karun Nair, MSK Prasad, India, Sri Lanka

அவர் அடித்த அந்த முச்சதம் அவருடைய திறமைக்குச் சான்றாகும். ஆனாலும் அதன் பின்னர் பெரிதாகக் செயல் படாததாலும் வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகக் கடுமையானதாக சென்று கொண்டிருக்கிறது.

இந்திய உள்ளூர் போட்டிகளிலும் சிறந்த வீரர் கருண் நாயர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் கொடுத்தால் இந்திய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த வீரராக வலம் வருவார்.

2.சர்பராஸ் கான்

மிக இளம் வயதிலேயே ஐபிஎல் அரங்கில் தனது திறமையை நிரூபித்தவர் .சர்பராஸ் கான் இவர் தனது பன்னிரண்டு வயதிலேயே பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 439 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். 2015ம் ஆண்டில் அரங்கில் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இவர் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

Sarfaraz Khan, Sarfaraz Khan RCB, RCB, IPL 2017, Cricket, Sarfaraz Khan IPL 2017

2016ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை  தொடரில் 6 போட்டிகளில் 355 2 ரன்கள்  குவித்தார். பெங்களூர் அணிக்காக 2016இல் ஆடியபோது அவரது அவர் மேலும் தனது உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும் எனக்கூறி விராத் கோலி  அவரை அணியில் இருந்து நீக்கினார்.

3. புவனேஷ்வர் குமார்

தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் புவனேஸ்வர் குமார். ஆனால், தற்போது இந்திய அணியில் விளையாடும் 11 பேரில் இடம் பிடிக்க முடியாமல் இருக்கிறார்.

விராட் கோலியினால் முடிவுக்கு வரவிருக்கும் 4 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை 2

தற்போது நடந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது இதற்கு முக்கிய காரணம் இவர்தான். திறமையும் அனுபவமும் இருந்தும் இவர் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு வருகிறார்.

4. தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் துரதிஸ்டவசமானவர் தினேஸ் கார்த்திக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளுர் போட்டிகளில் மிகவும் திறமையாகக் தொடர்ச்சியாக செயல்பட்டு வருபவர் இவர். ஆனாலும் அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வருபவர். அவ்வப்போது அணியில் தலைகாட்டி வருகிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் அந்த தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh Karthik, Dinesh Karthik IPL 2017, Dinesh Karthik Champions Trophy, Manish Pandey, Dinesh Karthik 2017, Cricket

இவரது திறமையும் அனுபவமும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கிடைக்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எனலாம் இவர் விக்கெட் கீப்பர் ஆவார்.

கடந்த விஜய் ஹசாரே கோப்பையிலும் 9 போட்டியில் ஆடி 86.71 சராசரியில் 607 ரன்களை குவித்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 704 ரன்கள் குவித்துள்ளார். அதில் சராசரி 54.15 ஆகும். துலீப் டிராபியில் 3 போட்டிகள் 211 ரன்னும் தியோதர் டிராபியில் 3 போட்டிகள் ஆடியுள்ள அவர் 247 ரன்களையும் குவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *