யுவராஜ் சிங்குக்கு மனம்கவர்ந்த செய்தியை சொன்ன கம்பிர்

இந்த ஐபில் தொடரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக ஆரம்பித்தது. முதல் 9 போட்டிகளில் 7 வெற்றிகள் பெற்று அசத்திய கொல்கத்தா அணி, புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்விகள் பெற்று முதல் இரண்டு இடத்துக்கான வாய்ப்பு கை விட்டு போனது. அது மட்டுமில்லாமல் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறுமா தகுதி பெறாதா என சந்தேகத்தில் இருந்தது. எப்படியோ, மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்து, புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது.

வெளியேறுதல் (எலிமினேட்டர்) போட்டியில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. சின்னஸ்வாமி மைதானத்தில் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று அசத்தியது.

முதலில் விளையாடிய ஐதராபாத் அணி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தாங்க முடியாமல் 20 ஓவரின் முடிவில் 128 ரன் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய நாதன் கோல்ட்டர்-நைல் நான்கு ஓவனில் 20 ரன் விட்டு கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் மழை குறுக்கிட்டது. இந்த மழையால் இந்த போட்டி பாதிக்கப்பட்டிருந்தால், புள்ளிபட்டியலில் கொல்கத்தா அணிக்கு மேல் இருக்கும் ஐதராபாத் அணியே 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால், மூன்று மணி நேரம் கழித்து மழை நின்றது.

இதனால் 6 ஓவரில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, முதல் இரண்டு ஓவரின் முடிவில் 12 எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது. ஆனால், கம்பிரின் அதிரடி ஆட்டத்தால், கடைசி ஓவரில் இலக்கை எட்டி 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ட்விட்டர் பக்கத்தில், இந்த பதிவை பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகு கர்நாடகா கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்பிறகு ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் லட்சுமண், யுவராஜ் சிங் மற்றும் டேவிட் வார்னர் ஆகியவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.