Cricket, Ajinkya Rahane, Virat Kohli, India, South Africa, Sourav Ganguly

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், உமேஷ்யாதவ், சித்தார்த் கவூல் ஆகியோர் நீக்கப்பட்டு தினேஷ்கார்த்திக், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வீரர்கள் தேர்வு முறைக்கு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.எல் ராகுலை நெ.4ல் களம் இறக்குங்கள் கோலி - கங்குலி அறிவுரை 1

சிறந்த பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ரகானே ஆகியோருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. அடிக்கடி மிடில் ஆர்டரை (நடுவரிசை) மாற்றி சோதிப்பது முன்கள பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோகித்சர்மா, தவான், விராட்கோலி ஆகியோர் சர்வதேச அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். இவர்கள் வலுவான பேட்ஸ்மேன்கள்.

ஆனால் இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் விரைவில் ஆட்டம் இழந்து ரன் எடுக்க முடியாமல் போகும் போது அடுத்தடுத்து களம் இறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும். இது அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும்.

இதனால் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்துவது அவசியம். இந்த வரிசையை அடிக்கடி மாற்றி சோதிப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.கே.எல் ராகுலை நெ.4ல் களம் இறக்குங்கள் கோலி - கங்குலி அறிவுரை 2

ராகுல், ரகானே ஆகிய 2 பேட்ஸ்மேன்களையும் அணி நிர்வாகம் போதுமான அளவு பயன்படுத்தவில்லை.

4-வது வீரர் வரிசைக்கு ராகுல் தான் பொருத்தமானவர் அவரை கண்டிப்பாக இந்த வரிசையில் களம் இறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ராகுலை 4-வது இடத்தில் பேட் செய்யுங்கள் என்று கூறிவிடுவேன். உங்களுக்கு 15 வாய்ப்புகள் தருகிறோம். விளையாடுங்கள் என்று கூறுவேன்.

மான்செஸ்டர் போட்டியில் சதம் அடித்த ராகுலை கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கியது ஏன்? என்று தெரியவில்லை. இதுபோன்ற சிறந்த வீரர்களை உங்களால் உருவாக்க முடியாது.கே.எல் ராகுலை நெ.4ல் களம் இறக்குங்கள் கோலி - கங்குலி அறிவுரை 3

5-வது வரிசையில் ரகானேயை பயன்படுத்தலாம். அதன்பின்னர் 6-வது இடத்துக்கு தினேஷ் கார்த்திக் அல்லது டோனியா? என்பதை முடிவு செய்யப்படும். 7-வது வீரராக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

ரகானேயை ஒருநாள் தொடரில் இருந்து நீக்கியது வேதனை அளித்தாலும் அவரின் சேவை டெஸ்ட் தொடருக்கு முக்கியம் என்பதை அணி நிர்வாகம் உணர்ந்து இருக்கிறது. இருவரையும் வேண்டுமென்றே அணி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது என்று நான் கூறவில்லை.

2019 உலக கோப்பையில் டோனி இடம் பிடிக்க வேண்டுமானால் அவரின் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்ப வேண்டும். 25 ஓவர்கள் வரை மீதம் இருக்கும்போது அவர் தன்னை நிலைப்படுத்தி கொண்டு நன்றாக விளையாடலாம். ஆனால் டோனி தடுமாறுகிறார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் டோனி. ஆனால் தற்போது பேட்டிங்கில் திணறுகிறார். அவர் தனது திறமையை அதிகரித்து இன்னும் 1ஆண்டுக்கு அணியில் நீடிக்க வேண்டும்.

இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *