கோலி, ரவி சாஸ்திரியை வைத்து தோனிக்கு பிளான் போடும் கங்குலி!! 1

தோனி, தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட வெளியிடவில்லை. இதனால், கிரிக்கெட் வட்டாரங்களையும் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தோனியின் எதிர்காலத்தை அவரே தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினர். முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, தோனியின் எதிர்காலம் குறித்து விராட் கோலியும், தேர்வுக்குழுவினரும் முடிவு செய்ய வேண்டும் என்றார். “தேர்வுக்குழுவினரும், விராட் கோலியும் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் முக்கியமானவர்கள். எனவே, அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,” என்றார் சவுரவ் கங்குலி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி வரும் 18ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை இந்தியா வெல்லும் என கங்குலி நம்புகிறார்.கோலி, ரவி சாஸ்திரியை வைத்து தோனிக்கு பிளான் போடும் கங்குலி!! 2

“இந்தியா பிடித்தமான அணி. சொந்த மண்ணில் இந்தியா ஒரு ஆபத்தான அணி. பல ஆண்டுகளாக அவர்கள் வெல்வது மிகவும் கடினமாக உள்ளது,” என்றார் கங்குலி.

கங்குலி தற்போது வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக உள்ளார், ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆலோசகராகவும் உள்ளார்.

“முதலில் ஒரு பயிற்சியாளர் முடிக்கட்டும், பிறகு இன்னொரு பயிற்சியாளர் குறித்து யோசிப்போம்,” என்றார்.

“எப்படியிருந்தாலும் நான் ஏற்கனவே ஒரு பயிற்சியாளர். ஐ.பி.எல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் நான் கவனிக்கிறேன். கடந்த ஆண்டு எனது முதல் சீசனில், அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடைசியாக இருந்த அணி, அரையிறுதி வரைக்கும் சென்றது,” என்றார் கங்குலி.

ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் முழுதும் பவுலிங் பிட்சில் 774 ரன்களை விளாசித்தள்ளி பல சாதனைகளை உடைத்த நிலையில் விராட் கோலியுடன் ஒப்பிடும் பேச்சுகளை கங்குலி ஏற்கவில்லை.கோலி, ரவி சாஸ்திரியை வைத்து தோனிக்கு பிளான் போடும் கங்குலி!! 3

விராட் கோலி 903 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்க, ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் மீண்டும் கோலி-ஸ்மித் ஒப்பீடு குறித்த கேள்வி எழுந்த போது சவுரவ் கங்குலி, “இத்தகைய கேள்விகள் பதிலுக்கு உகந்தவை அல்ல. இது என்ன முக்கியமா? இது ஆட்டத்திறன் பற்றியது. விராட் இப்போதைக்கு உலகின் சிறந்த வீரர். ஆகவே இதுதான் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஸ்மித்தைப் பொறுத்தவரையில் சாதனைகளே பேசுகின்றன. 26 டெஸ் சதங்கள் மிகப்பெரிய சாதனைதான்.” என்றார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *