பிசிசிஐ தலைவரானதும் ஐபிஎல்க்கு முன்னுரிமை கிடையாது, இதற்குத்தான் முன்னுரிமை: சவுரவ் கங்குலி அசத்தல் பேட்டி 1
Well, it would be interesting to see how things would pan out for the Indian National Cricket Team. The next 10 months are going to be interesting.

நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை அமுல்படுத்த ஏதுவாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி வினோத் ராய் தலைமையில் 3 நபர்கள் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை பிசிசிஐ விவகாரங்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக சிஓஏ தலைவர் வினோத் ராய், முன்னாள் மகளிரணி கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் நிர்வாகப் பணிகளை மேற்கொண்டனர். காலியாக இருந்த மூன்றாவது உறுப்பினர் இடத்துக்கு ரவி தோக்டே நியமிக்கப்பட்டார்.

பிசிசிஐ நிா்வாகிகள் தோ்தல் வரும் 23-ம் தேதி மும்பையில் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறுகிறது. இந்திய தலைமை தோ்தல் ஆணையா் (ஓய்வு) கோபால்சாமி தோ்தலை நடத்துகிறாா். பிசிசிஐ புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிந்தவுடன் சிஓஏவின் பதவிக்காலம் நிறைவுக்கு வரும்.

பிசிசிஐ தலைவரானதும் ஐபிஎல்க்கு முன்னுரிமை கிடையாது, இதற்குத்தான் முன்னுரிமை: சவுரவ் கங்குலி அசத்தல் பேட்டி 2
Kolkata: Former Indian cricket captain and Cricket Association of Bengal (CAB) president Sourav Ganguly addresses budding cricketers during the inauguration of the Calcutta Police Surgeants’ Institute cricket academy in Kolkata on Friday. PTI Photo(PTI11_24_2017_000094A)

இந்நிலையில் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி போட்டியிடவுள்ளார். இன்று, தலைவர் பதவிக்கு கங்குலி மட்டும் மனுத்தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் போட்டியின்றித் தேர்வாகவும் வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேல் தேர்வாகவுள்ளார்.

எனினும் கடந்த ஐந்து வருடங்களாக கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி உள்ளதால் பிசிசிஐ தலைவராக 10 மாதங்கள் மட்டுமே அவர் பதவி வகிக்க முடியும். புதிய விதிமுறைகளின்படி பிசிசிஐ நிர்வாகப் பதவியில் ஆறு வருடங்கள் பதவி வகித்த பிறகு, மூன்று வருடங்கள் கழித்தே பிசிசிஐ நிர்வாகப் பதவியில் ஒருவர் மீண்டும் போட்டியிடமுடியும்.

இந்நிலையில் மும்பையில் கங்குலி பேட்டியளித்தபோது கூறியதாவது:

பிசிசிஐ தலைவரானதும் ஐபிஎல்க்கு முன்னுரிமை கிடையாது, இதற்குத்தான் முன்னுரிமை: சவுரவ் கங்குலி அசத்தல் பேட்டி 3
LONDON, UNITED KINGDOM – MAY 30: Former India Cricketer Sourav Ganguly during the ICC Champions Trophy Warm-up match between India and Bangladesh at the Kia Oval on May 30, 2017 in London, England. (Photo by Harry Trump – IDI/IDI via Getty Images)

உலக கிரிக்கெட்டின் மிகப் பெரிய நிறுவனம், பிசிசிஐ. எனவே இதன் தலைவராவது மிகப்பெரிய பொறுப்பு. மிகவும் சவாலான பணியும்கூட.

முதல்தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதில் தான் முன்னுரிமை அளிப்பேன். கிரிக்கெட் நிர்வாகக் குழுவிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. கிரிக்கெட் வீரர்களின் வருமானம் தொடர்பாகக் கவனம் செலுத்த ரஞ்சிப் போட்டி மீது அக்கறை செலுத்தப்படும் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *