ஷிகர் தவான் மற்றும் கவுதம் கம்பிருக்கு இடையிலான உரையாடலை ட்விட்டர் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த ஐபில்-இல் கவுதம் கம்பிர் ‘FBB ஸ்டைலிஷ் பிளேயர் ஆப் தி சீசன்’ விருதை வென்றதற்காக முதல் வீரராய் கம்பிருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஷிகர் தவான். அதற்கு, சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கு இந்திய அணியில் தவான் இடம்பெற்றதால், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் கவுதம் கம்பிர்.
இந்த ஐபில்-இல் 16 போட்டிகளில் 498 ரன்கள் அடித்து அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளார் கவுதம் கம்பிர். அத்துடன் 4 அரைசதங்கள் அடித்து, மூன்று ‘FBB Stylish Player Of The சீசன்’ விருதை வென்று அசத்தினார்.
கிங்ஸ் XI பஞ்சாப் வீரர் ஹசிம் ஆம்லா, கொல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே, ரைஸிங் புனே சூப்பர்ஜெய்ன்ட் வீரர் மனோஜ் திவாரி ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால், இவர்களை முந்திக்கொண்டு முதல் இடத்தில் இருந்தார் கவுதம் கம்பிர்.
இந்த ஐபில் தொடர் முடிந்த மறுநாளே கம்பிருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஷிகர் தவான்.
அதனை பார்த்த கம்பிர், உடனே பதிலளித்தார்.
கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பிர், இந்த ஐபில்-இல் தெறி பார்மில் இருந்தாலும், சாபின்ஸ் ட்ராப்பிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
காயத்தில் இருந்து மீளாத லோகேஷ் ராகுலுக்கு பதிலாக அந்த இடத்தை பிடித்தார் மற்றொரு டெல்லி வீரர் ஷிகர் தவான்.
சாம்பியன்ஸ் டிராப்பி தொடர் ஜூன் 1 ஆம் தேதி தொடர்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. தன்னுடைய முதல் போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.