JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக தோனியின் பேட்டிங் ஃபார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார்.தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர் 1

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நடந்துவரும் டி20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்திய அணியில் முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் தோனி குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:

”மகேந்திரசிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. இனிமேல் தோனிக்கு அடுத்த இடத்தில் யாரைக் கொண்டுவருவது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும்.

2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியை இளைஞர்கள்தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து. தோனி இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர் 2

ஆனால், இப்போது அவரை சற்று ஒதுக்கிவைத்து அடுத்த வீரரைத் தேர்வு் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தோனியை வலுக்கட்டாயமாக அனுப்பாமல் , அவராகவே சென்றுவிடுவார் என்று நினைக்கிறேன்.

உலகக்கோப்பை போட்டிக்குப் பின் அணியில் இடம் பெறாமல் தோனி இருக்கிறார். தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தோனியை இந்திய அணி தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. இதனால் தோனி ஓய்வை அறிவிப்பாரா அல்லது அணியில் தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேசமயம் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக கொண்டுவரப்பட்டுள்ள ரிஷப் பந்த் பேட்டிங்கில் பொறுப்பற்ற தனமாகச் செயல்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. பேட்டிங்கில் அவசரப்பட்டு ஷாட்களை ஆடுவதும், விரைவாக விக்கெட்டுகளை இழப்பதும் அணியின் பேட்டிங் வரிசையை ஸ்திரம் இழக்க வைக்கிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. • SHARE
 • விவரம் காண

  16 வயதில் 140கிமி வேகபந்தை மூக்கில் வாங்கினார் சச்சின்.. அதன்பின்னர் நடந்தது எல்லாம்….! 30 வருட ரகசியத்தை உடைத்த வக்கார் யூனீஸ்

  சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இந்திய...

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்!

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இந்த ஒரு விஷயத்தில் மிகவும் மோசம்; யாரும் அறியாத ரகசியத்தை வெளியிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய அணியின் முன்னாள்...

  அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ… கவலையில் குல்தீப் யாதவ்

  தோனி கீப்பிங் செய்யும்போது பீல்டர்களை எங்கு நிற்கவைப்பது என்ற கவலை எனக்கு இருந்ததே இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்...

  வீடியோ: விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா!

  விராட்கோலி பேச்சை கேட்டு, மனைவி முன்னர் அப்படி செய்து வீடியோ எடுத்துப்போட்ட ஹார்திக் பாண்டியா! விராட்கோலி சொன்ன சேலஞ்சை செய்து முடித்து, வீடியோ ஒன்றை...

  இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்!

  இந்தியாவை இந்தியாவிலேயே முடித்துக்கட்ட இந்த அணியால் நிச்சயம் முடியும்; வேண்டுமென்றே வம்பிழுக்கும் ஆஸி., வீரர்! இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்த...