ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் தோனி குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:

ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும்.

MANCHESTER, ENGLAND – JULY 10: Rishabh Pant of India bats during resumption of the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand after weather affected play at Old Trafford on July 10, 2019 in Manchester, England. (Photo by Nathan Stirk/Getty Images)

அடுத்து நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கூட தோனியைத் தேர்வு செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அவருகுப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கலாம்.

ஒருவேளை ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம். சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்.

2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியை இளைஞர்கள்தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

Jaipur: Rajasthan Royals’ Sanju Samson celebrates his half century during an IPL 2018 match between Mumbai Indians and Rajasthan Royals at Sawai Mansingh Stadium in Jaipur on April 22, 2018. (Photo: Surjeet Yadav/IANS)

பேட்டிங் வரிசையில் ரிஷப் பந்த் 5 அல்லது 6-வது வரிசையில் களமிறங்குவது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். அவரின் பேட்டிங் இடம் எது என்பது அனைவருக்கும் விரைவில் தெரியவரும். டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை இன்னும் நாம் பட்டை தீட்ட வேண்டும். அவரின் தவறுகளை நாம் அடிக்கடி சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக்கொள்வார்’’.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

  • SHARE

  விவரம் காண

  நாங்கள் இருக்கும்வரை இனி இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடையாது: ஓப்பனாக பேசும் உமேஷ் யாதவ்

  இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய வேண்டுமென்றால் ஏற்கெனவே ஆடிக்கொண்டிருப்பவர்களை விட திறமையானவர்களாக இருந்தால்தான் முடியும்...

  இந்த தொடரின் வெற்றிக்கு இவர்தான் காரணம்: உமேஷ் யாதவ் பேட்டி

  Virat Kohli (captain) of India and Umesh Yadav of India celebrates the wicket of Vernon Philander of South Africa during day 4 of the second test match between India and South Africa held at the Maharashtra Cricket Association Stadium in Pune, India on the 13th October 2019 Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
  சிறப்பான கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹாவுக்கு வேகப்பந்து வீச்சாளா் உமேஷ் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளாா். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா...

  பிசிசிஐ தலைவரானதும் ஐபிஎல்க்கு முன்னுரிமை கிடையாது, இதற்குத்தான் முன்னுரிமை: சவுரவ் கங்குலி அசத்தல் பேட்டி

  நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை அமுல்படுத்த ஏதுவாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி வினோத் ராய் தலைமையில் 3 நபர்கள் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை...

  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் வெளியீடு: இந்திய மரணம் மாஸ்!

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு...

  இந்த 3 பேர் இருந்திருந்தால் வெற்றி பெற்று இருப்போம்: டு ப்லெஸிஸ் ஆதங்கம்

  ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா போன்ற வீரர்களின் இடத்தை ஒரே இரவில் நிரப்ப முடியாது என தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ்...