மார்கெட்டில் விற்காத முத்தின கத்திரிக்காய் ஆன கெய்ல் : பி.எஸ்.எல் லீக்கில் சோகம் 1
 மார்கெட்டில் விற்காத முத்தின கத்திரிக்காய் ஆன கெய்ல் : பி.எஸ்.எல் லீக்கில் சோகம் 2
டி20 கிரிக்கெட் லீக் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்தான். அதிரடி சதம், கிச்சர் மழை என ரசிகர்களை குஷிபடுத்தியவர். இவர் இல்லாத டி20 கிரிக்கெட் லீக் தொடரே இல்லை என்று கூறும் அளவிற்கு பிரபலம் பெற்றவர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இரண்டு சீசன் முடிந்துள்ள நிலையில் 3-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.

இதற்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 308 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 501 பேர் இடம்பிடித்திருந்தனர். இதில் கிறிஸ் கெய்லும் ஒருவர். ஆனால், எந்த அணி உரிமையாளர்களும் கிறிஸ் கெய்லை ஏலம் எடுக்கவில்லை. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கவைத்துள்ளது.மார்கெட்டில் விற்காத முத்தின கத்திரிக்காய் ஆன கெய்ல் : பி.எஸ்.எல் லீக்கில் சோகம் 3

ஆனால், சமீப காலமாக கெய்ல் ஃபார்மின்றி தவிக்கிறார். மேலும் தொடர் முழுவதும் அவர் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்று அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால் அடுத்த வருடம் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வருகிறது.மார்கெட்டில் விற்காத முத்தின கத்திரிக்காய் ஆன கெய்ல் : பி.எஸ்.எல் லீக்கில் சோகம் 4

உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கிறிஸ் கெய்ல் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் கிறிஸ் கெய்லை அணியில் எடுத்தாலும் அவரால் முழுத்தொடர் முழுவதும் விளையாட முடியாது. இதனால்தான் அவரை உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த ஓரே வீரர் கிறிஸ் கெய்ல்தான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *