இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இதுபோன்று ஆஸ்திரேலியா பிக்பாஷ், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் டி20 லீக், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேசம் வங்காளதேசம் பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது.
மற்ற நாட்சைச் சேர்ந்த வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற டி20 லீக் தொடரில் விளையாட வீரர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை.
இந்நிலையில் இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என்று டி20 ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு ஐபிஎல் தொடர் விளையாடு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டில் நடைபெறும் லீக் தொடரில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.
இதுபோன்ற வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்கமாமல் போகிறது. இதனால் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினமாகிறது. இதனால் மற்ற டி20 லீக்கில் ஆடினால் சர்வதேச அளவிற்கான அனுபவத்தை பெற முடியும்’’ என்றார்.
நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி ‘குவாலிபையர்2’ ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் வெளியேற்றப்பட்டது.


ஐதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 5 விக்கெட்டில் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ் பாண்டே, யூசுப்பதான், பிராத்வெயிட், ரஷீத்கான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
மேலும் உள்ளூரில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே. கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ்லின், சுனில் நரீன், ஆந்த்ரே ரஸ்சல், உத்தப்பா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது