முஜீப், கெயில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றியை பறித்துவிட்டனர் : கேப்டன் கூல் தோனி 1

முதுகில் வலி ஏற்பட்டதால் போட்டியின் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்திருக்கிறார்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.

மொகாலியில் நடைபெற்ற பஞ்சாப்- சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாச த்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 63 ரன்கள் விளாசினார்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி, ராயுடு மற்றும் கேப்டன் தோனியின் அதிரடியால் வெற்றியின் அருகில் சென்றது. இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.

முஜீப், கெயில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றியை பறித்துவிட்டனர் : கேப்டன் கூல் தோனி 2

பின்னர் பேசிய தோனி,  ‘கிறிஸ் கெய்ல் சிறப்பாக ஆடினார். முஜிப் நன்றாக பந்துவீசினார். இரண்டாம் பாதியில் பனி அதிகமாக இருக்கும் என்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை. எந்த மாதிரியான பந்துகளை அடிக்காமல் விட்டோம் என்பது உள்ளிட்ட விஷயங்களை யோசித்து நாங்கள் செயல்பட வேண்டிய நேரம் இது. அனைத்து போட்டியிலும் வெற்றி அருகில்தான் இருக்கிறது. ஆனால், அணியில் உள்ளவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து விதத்திலும் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டியிருக்கிறது. ஜடேஜா மீது நம்பிக்கை இருக்கிறது. அவருக்கான வாய்ப்பை வழங்க இதுதான் சரியான நேரம்.முஜீப், கெயில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றியை பறித்துவிட்டனர் : கேப்டன் கூல் தோனி 3 அவர் சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன். எனது முதுகில் வலி ஏற்பட்டதால் போட்டியின் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்திருக்கிறார். எனது கைகள் அதன் வேலையை செய்வதால் எனது முதுகை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. இது அதிகமான பாதிப்பாக இருக்கக் கூடாது. எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை’ என்றார்.

முஜீப், கெயில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றியை பறித்துவிட்டனர் : கேப்டன் கூல் தோனி 4

ஆட்ட நாயகன் விருது பெற்ற கிறிஸ் கெய்ல் கூறும்போது, ‘இன்று (நேற்று) காலை எனக்கு மெசேஜ் வந்தது, சென்னைக்கு எதிராக களமிறங்குவது பற்றி. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி, மீண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி. முக்கியமாக அணி வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் நிலையாக நின்றபின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருக்க வேண்டும். அப்படியே செய்தேன். இதில் வென்ற பின், 25 வயது இளைஞனை போல உணர்கிறேன்’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *