25 பந்தில் சதம்: ஸ்காட்லாந்து வீரர் அதிரடி
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு வீரர் இங்கிலாந்து நாட்டில் நடக்கும் ஒரு தொடரில் வெறும் 25 பதில் பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தின் போது வெறும் 17 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். அதனைத் தாண்டி அடுத்த ஏழு பந்தில் மேலும் ஒரு அரைசதம் அடித்தார். இதன் மூலம் வெறும் 25 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் ஒன்றான இரண்டாம் கட்ட கவுண்டி டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிற.து இதில் கிலோசிஸ்டர் அணியின் இரண்டாம் கட்ட வீரராக களம் இறங்கியவர் ஜார்ஜ் முன்ஸி. இந்த ஜார்ஜ் முன்ஸி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது இங்கிலாந்து கவுண்டி அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.

இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய அவர் அதிரடியாக ஆடி அனைத்து பந்துகளையும் விளாசித் தள்ளினார். இந்த ஆட்டத்தின் போது ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார். மொத்தம் 39 பந்துகள் மட்டுமே பிடித்து 147 ரன்கள் விளாசித் தள்ளினார் ஜார்ஜ். இறுதியாக இவரது அணி 20 ஓவர்களின் முடிவில் 326 ரன் குவித்தது. இவருடன் வந்த மற்றொரு வீரர் 53 பந்துகளில் சதம் விளாசினார். மேலும் டாம் ப்ரைஸ் என்னும் வீரர் 23 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
இதன் காரணமாக 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 20 ஓவர்களின் முடிவில் 326 ரன்கள் எடுத்தது அந்த அணி. இதுவரை டி20 கிரிக்கெட் தொடரில் அதிகபட்சமாக 175 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிவேக சதம் ஆக ஜார்ஜ் அடித்த 25 சதம் மட்டுமே தற்போது வரை உள்ளது.
இந்த ஆட்டத்தில் ஜார்ஜ் மொத்தம் 20 சிக்சர்களும் 5 பவுண்டரிகள் விளாசினார் மேலும் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி உள்ளார். 50 நிமிடம் ஆடியே இவர் அதிரடியாக ருத்ர தாண்டவம் ஆடி கடைசியாக இவர் அணி112 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
??
WOW!! That scorecard, well played George Munsey? pic.twitter.com/BhvR22tUJP
— Gloucestershire Cricket? (@Gloscricket) April 21, 2019