தரமான கம்பேக் கொடுத்த குல்தீப், மிரட்டிய சிராஜ், உம்ரான் .. 215 ரன்களுக்கு சுருண்டது இலங்கை!

குல்தீப், சிராஜ், உம்ரான் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

துவக்க வீரர் அவிஷ்கா பெர்னான்டோ இருபது ரன்களுக்கு சிராஜ் பந்தில் போல்டானார். அறிமுக வீரர் நுவனிது பெர்னால்டோ மற்றும் குஷால் மெண்ட்டீஸ் இருவரும் ஜோடி சேர்ந்த இரண்டாவது விக்கெட்டுக்கு நல்ல பாட்டன்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. அப்போது குஷால் மெண்ட்டீஸ் 34 ரன்களுக்கு குல்தீப் பவுலிங்கில் ஆட்டம் இழந்தார்.

அடுத்ததாக உள்ளே வந்த தனஞ்செயா டி சில்வா, வந்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். ஒரு முனையில் நுவனிது பெர்னாண்டோ நிலைத்து நின்று ஆடிய போதும் மற்றொருபுறம் வந்த வீரர்கள் எவரும் பார்ட்னர்ஷிப் அமைக்காததால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது இலங்கை அணி.

நுவனிது அரைசதம் அடித்த உடனேயே 50 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் அசலன்கா 12 ரன்கள், கேப்டன் ஷனக்கா 2 ரன்கள் அடித்து குல்தீப் வசம் ஆட்டமிழந்தனர். வணிந்து ஹசரங்கா 21 ரன்கள் அடித்து உம்ரான் மாலிக் பந்தில் அவுட்டாகினர்.

சிறிது நேரம் நிலைத்து ஆடிய இளம் வீரர் துனித் வெல்லாளகே 32 ரன்கள் அடித்து சிராஜ் பந்துளில் வெளியேறினார். கருநரத்தினே 17 ரன்கள் இருந்தபோதும் உம்ரான் பந்தில் அவுட்டாகினர்.

ரஜிதா இறுதிவரை அவுட்டாகாமல் 17 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர். அக்ஸர் பட்டேல் 1 விக்கெட் எடுத்தார்.

100 ரன்கள் வரை 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி, மிடில் ஆர்டர் சோதப்பியதால் 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Mohamed:

This website uses cookies.