பெனோனி சால்மி அணிக்கு பயிற்சியாளராக க்ரீம் ஸ்மித்

தென்னாபிரிக்காவில் நடக்கவுள்ள முதல் டி20 லீக் தொடரில் பெனோனி சால்மி அணியின் பயிற்சியாளராக க்ரீம் ஸ்மித் செயல்படவுள்ளார். இந்த செய்தியை இணையதளங்களில் அந்த அணியே அறிவித்தது.

117 டெஸ்ட், 197 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள க்ரீம் ஸ்மித், டி20 போட்டிகளில் சராசரி 30 ஆக வைத்துள்ளார்.

இதற்கு முன்னர், பல டி20 அணிகளுக்காக க்ரீம் ஸ்மித் விளையாடியுள்ளார்.ஐபில்-இல் புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் க்ரீம் ஸ்மித்.

தற்போது தான் முதல் முறையாக பயிற்சியாளராக அவர் செயலாற்ற போகிறார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஒரு அணிக்கு கூட பயிற்சியாளராக செயல் பட வில்லை.

அந்த அணியுடன் அவர் செய்ய உள்ள முதல் வேலை, ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடக்கவுள்ள ஏலத்தில் வீரர்களை வாங்குவது தான். அந்த ஏலத்தில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள போகிறார்கள்.

தென்னாபிரிக்காவில் நடக்கவுள்ள புதிய டி20 லீக் தொடர் இந்த வருட நவம்பர்/டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.