மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தான்; பயமில்லாமல் வெளியிட்ட ஸ்ரீசாந்த் 1

என்னுடைய குடும்பத்தினர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்கிறார் ஸ்ரீசந்த்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்துக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் முறையிட்டார். கோர்ட் அவரை விடுவித்தது.

என்றாலும், அவரால் இன்றும் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. 36 வயதாகும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசந்த், இன்னும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் குடும்பத்தினர் மீது சத்தியம் செய்து தவறு செய்யவில்லை என்று ஸ்ரீசந்த் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தான்; பயமில்லாமல் வெளியிட்ட ஸ்ரீசாந்த் 2
In 2013, the 34-year-old pacer Sreesanth was handed over a life ban by the BCCI after the 2013 Indian Premier League (IPL) spot-fixing scandal surfaced and forced the Board to act swifty.

இதுகுறித்து ஸ்ரீசந்த் கூறுகையில் ‘‘எனது குழந்தை, கடந்த ஐந்து வருடமாக நோயால் உயிருக்கு போராடிக் கொண்டிக்கும் எனது தந்தை, ஒரு கால் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் எனது  தாய்  ஆகியவர் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் மேட்ச் பிக்சிங் ஈடுபடவில்லை. அவர்கள் என்னுடைய போட்டியை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையை இழக்கவில்லை. 100 கோடி ரூபாய் தந்தால் கூட மேட்ச் பிக்சிங் தவறை செய்யமாட்டேன்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்கள் சிலர், சிரித்த முகத்துடன் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். போலீசார் காட்டிய சாட்சியின்படி நான் பெயர்களை வெளியிட முடியும். ஆனால், அதை நான் செய்யமாட்டேன். மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்ப எனக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. சில  வீரர்கள் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஓய்வு பெற்று விட்டார்கள். நம் நாட்டு வீரர்கள் மட்டுமல்ல. உலகளவில் விளையாடுகிறார்கள்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தான்; பயமில்லாமல் வெளியிட்ட ஸ்ரீசாந்த் 3
Kochi: Cricketer S. Sreesanth at the Kerala High Court in Kochi on Monday. The Court on Monday lifted the life ban imposed on him by the Board of Control for Cricket in India (BCCI) in the 2013 Indian Premier League (IPL) spot-fixing case. PTI Photo (PTI8_7_2017_000105A) *** Local Caption ***

நான் இந்த பிரச்சனையை கடந்து வந்த அளவிற்கு அவர்கள் வலிமையானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள்தான். ஆனால், அவர்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *