நான் சந்தித்ததிலயே சிறந்த 2 பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான்: ஆடம் கில்கிர்ஸ்ட் ஓப்பன் டாக் 1

இந்தியாவில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் மாயாஜால பந்து வீச்சால் எங்களை துவம்சம் செய்துவிட்டார் என கில்கிறிஸ்ட் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கடந்த 2001-ம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 16 வெற்றிகள் பெற்று சாதனைப் படைத்திருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.

நான் சந்தித்ததிலயே சிறந்த 2 பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான்: ஆடம் கில்கிர்ஸ்ட் ஓப்பன் டாக் 2
Australian legend Adam Gilchrist has described Harbhajan Singh as his “nemesis”, saying the Indian off-spinner and Sri Lanka’s Muttiah Muralitharan were the two hardest bowlers that he faced during his international career.

அதன்பின் வந்த ஆடம் கில்கிறிஸ்ட் அதிரடியாக விளையாடி 80 பந்தில் சதம் அடித்தார். இவரது சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதே சிந்தனையோடு சென்ற ஆஸ்திரேலியா, அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஹர்பஜன் சிங் சுழலில் சிக்கி படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த டெஸ்ட் தொடருக்குப்பின் நாங்கள் எங்களது அணுகு முறையையே மாற்றிவிட்டோம் என ஆடம் கில்கிறிஸ்ட் நினைவு கூர்ந்துள்ளார்.

2001 தொடர் குறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘மும்பை டெஸ்டிற்குப் பிறகு நாங்கள் அட்டக்… அட்டக்… அட்டக்.. என்ற அணுமுறையில் சென்றோம். ஆனால், அது சரியாக ஒர்க்-அவுட் ஆகவில்லை. ஹர்பஜன் சிங் மாயாஜால பந்து வீச்சால் எங்களை அவர் ஏமாற்றி விட்டார். நான் சந்தித்ததி்லேயே ஹர்பஜன் சிங் மற்றும் முரளீதரன் ஆகியோர்தான் கடினமான பந்து வீச்சாளர்கள்.

Cricket, Virender Sehwag, Muttiah Muralitharan, India, Sri Lanka
Talking about his illustrious career’s milestones and memorable moments, the wicketkeeper recalled 2001 away Test series against India where Harbhajan starred with the ball.

இந்தத் தொடருக்குப்பின் நாங்கள் எங்களுடைய யுக்தியை மாற்றிக் கொண்டோம். 2001 தொடரில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அட்டாக் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை தெரிந்து கொண்டோம். எங்களுடைய ஈகோவை ஒழித்துவிட கற்றுக் கொண்டோம்.’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *