இந்திய கிரிக்கெட் அணியில் திறமைசாலிகள் இடம்பெறவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஹர்பஜன் சிங். பல இளம் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக தன் ட்விட்டர் கணக்கு வழியாக அவர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பார். தற்போது, 29 வயது மும்பை வீரரான சூர்ய குமார் யாதவுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்.
ட்விட்டரில், ஹர்பஜன் சிங் கூறியதாவது:
இந்தியா, இந்தியா ஏ, இந்தியா பி அணிகளுக்குத் தேர்வானவர்களைப் போல ரன்களைக் குவிப்பதைத் தவிர சூர்ய குமார் யாதவ் என்ன தவறு செய்தார் என எண்ணிப் பார்க்கிறேன். ஏன் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அடுத்த மாதம், இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து, ஒருநாள் மற்றும் நான்கு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்தியா ஏ ஒருநாள் அணியில் சூர்ய குமார் யாதவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷவர்த் சடே , ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்
இந்தியாவின் ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திரா குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்கூர், மொஹமது ஷமி.

இரண்டு சுற்றுப்பயண போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்களுக்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் (கேப்டன்), சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ஆக்சர் படேல், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், இஷான் பொரல், கலீல் அகமது, மொஹமது ஸ்ரீராஜ்
முதல் நான்கு நாள் ஆட்டத்திற்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மான் கில், ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஷாபாஸ் நதீம், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர் , அவேஷ் கான், மொஹமட். சிராஜ், இஷான் பொரல், இஷான் கிஷன்
இரண்டாவது நான்கு நாள் ஆட்டத்திற்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஆர் அஸ்வின், ஷாபாஸ் நதீம், சந்தீப் வாரியர், அவேஷ் கான், மொஹமட். சிராஜ், இஷான் பொரல்.