உலக்கோப்பை தோல்விக்கு காரணம் தோனி இல்லை... இவர்தான்! சரியான புதிய காரணத்தை கொண்டு வந்துள்ள ஹர்பஜன் சிங்! 1

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக கையாளவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மற்ற முன்னணி அணிகள் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடிய நிலையில், இந்தியா மட்டும்தான் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இவர்கள் திகழ்ந்தனர். இதனால் இந்த ஜோடி இங்கிலாந்து உலகக்கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.உலக்கோப்பை தோல்விக்கு காரணம் தோனி இல்லை... இவர்தான்! சரியான புதிய காரணத்தை கொண்டு வந்துள்ள ஹர்பஜன் சிங்! 2

குல்தீப் யாதவ் 10 போட்டிகளில் 7-ல் மட்டுமே இடம்பிடித்து 6 விக்கெட் வீழ்த்தினார். சாஹல் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இருவர்களையும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அணி நிர்வாகம் சிறப்பாக பயன்படுத்தவில்லை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் வார்னே, முத்தையா முரளீதரன், அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் இல்லை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தரனமான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடிய ஒரே அணி இந்தியாதான். அவர்கள் நமக்கு வெற்றியை தேடி தந்திருக்க வேண்டும்.

உலக்கோப்பை தோல்விக்கு காரணம் தோனி இல்லை... இவர்தான்! சரியான புதிய காரணத்தை கொண்டு வந்துள்ள ஹர்பஜன் சிங்! 3
New Zealand’s Colin de Grandhomme (L) walks from the field after being caught as India’s Yuzvendra Chahal (C and India’s Kuldeep Yadav celebrate during the second one-day international (ODI) cricket match between New Zealand and India in Tauranga on January 26, 2019. 

அவர்கள் இருவரையும் கையாண்ட விதம் எனக்கு சற்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.  பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் மேஜிக் பந்து வீசினார். எந்தவொரு ஆடுகளமாக இருந்தாலும் அவரால் பந்தை டர்ன் செய்ய முடியும். குறிப்பாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்த்து சிறப்பாக விளையாடியது கிடையாது.  இதனால் அவர் ஏன் அரையிறுதியில் விளையாடவில்லை என்பது எனக்கு ஆச்சர்யாகமாக உள்ளது.

இந்த இருவரையும் சரியாக கையாளாததே தோல்விக்கு காரணம். கேப்டன் விராட் கோலி இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *