யோ-யோ தேர்வு பிசிசிஐ ஆல் நடத்தபடும் நாடகம் 1
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் போதுமானது .

ஆனால் தற்போது சிறப்பான ஃபார்மையும் தாண்டி,  இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் யோ-யோ உடற்பயிற்சி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் இந்திய அணியில் விளையாடும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் ஏரளமான வீரர்கள் சிறப்பான ஃபார்மில் இருந்தும் யோ-யோ தேர்வில்  தோல்வி அடைந்ததால் இந்திய அணிக்கு தேர்ந்தெடுப்படாமல் இருந்தனர்.

இது குறித்து  தனியார் தொலைகாட்ச்சி ஒன்றில் பேசிய  ஹர்பஜன் சிங்
” யோ-யோ தேர்வு பிசிசிஐ ஆல் நடத்தபடும்  நாடகம்” என பளிச் என்று பதிலளித்தார்.

யோ-யோ தேர்வு பிசிசிஐ ஆல் நடத்தபடும் நாடகம் 2

யோ-யோ தேர்வால்  இந்திய வீரர் அம்பதி ராயுடு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாமல் போனதால் தற்போது  ஹர்பஜன் சிங் அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கை போலவே யோ-யோ தேர்வுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட்  ஜாம்பவான்களான கபில் தேவ், திலிப்  வெங்சர்க்கார் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *