வீடியோ: “போன ஓவரே தண்ணி கேட்டேன், அங்க என்ன ****றியா” சொந்த அணி வீரரை கேட்டவார்த்தையில் திட்டிய ஹர்திக் பாண்டியா! வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சொந்த அணி வீரரை கேட்ட வார்த்தையில் பேசி மாட்டிக்கொண்டார் ஹர்திக் பாண்டியா. ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டதால் வசமாக சிக்கினார்.

இந்தியா-இலங்கை அணிகள் விளையாடிவரும் இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்தது இலங்கை அணி.

போட்டியின் 11வது ஓவர் முடிந்தபின் உள்ளே ஃபீல்ட்டிங் செய்துகொண்டிருந்த ஹர்திக் பாண்டியா, டக்-அவுட்டில் இருந்த இந்திய வீரரை நோக்கி ‘போன ஓவரே தண்ணி கேட்டேன், அங்க என்ன ஊ**** இருக்கியா’ என தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா இப்படிப்பேசியது, மைதானத்தின் ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது. இவர் டக்-அவுட்டில் இருந்த வாஷிங்டன் சுந்தரை நோக்கி இப்படி பேசியதாகவும் தெரிகிறது. பண்டியாவின் இந்த செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

வீடியோ:

போட்டி சுருக்கம்:

இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ 50 ரன்களும், குஷல் மெண்டிஸ் 34 ரன்களும், வெல்லாளகே 32 ரன்களும் அடித்தனர்.

இந்திய அணிக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக குல்தீப் மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

216 ரன்கள் என்கிற இலக்கை துரத்தி வரும் இந்திய அணிக்கு அதிரடியாக விளையாடிய கில் 12 பந்துகளில் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரோகித் 21 பந்துகளில் 17 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

அடுத்து உள்ளே வந்த சிறந்த பார்மில் இருக்கும் விராட் கோலி 8 பந்துகளில் 4 ரன்கள் அடித்திருந்தபோது, லாஹிரு குமரா பந்தில் போல்டாகினார்.

10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 67 ரன்களில் விளையாடி வருகிறது இந்திய அணி. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் விளையாடி வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.