ஹர்திக் பாண்டியாவை கவுரவித்த இங்கிலாந்து கால்பந்து கிளப் 1

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட்
கால்பந்து கிளப்  ‘சிறப்பு பரிசு’ வழங்கி கவுரவித்துள்ளது.

எம்எஸ்.தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், பயிற்சியின் போது கால்பந்து விளையாடுவது வழக்கமாக இருந்தது. அது இன்றளவும் தொடர்கின்ற நிலையில், பயிற்சியின்போது வீரர்களுக்கு மத்தியில் நடக்கும்  கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர்.

இந்நிலையில் தீவிர கால்பந்து ரசிகரான ஹர்திக் பாண்டியாவுக்கு கால்பந்து வீரர்கள் கையொப்பம் இட்ட ஜெர்ஸியை, இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் பரிசாக வழங்கி இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன்
பாண்டியா பகிர்ந்துள்ளார்.

 

 

கல்ஃப் ஆயில் நிறுவனத்தின் ட்வீட்டை பகிர்ந்துள்ள பண்டியா  கல்ஃப் ஆயில் நிறுவனத்திற்கும் மான்செஸ்டர் யுனைடெட்
கிளப்பிற்கும் ஒரு பெரிய நன்றி” என்று பதிவிட்டுள்ளார்

கல்ஃப் ஆயில் நிறுவத்தின் பிராண்ட் அம்பாசிடராக ஹர்திக் பாண்டியா கடந்த மார்ச் மாதம் நியமிக்கபட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது. 

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியில், இடம்பெற்றிருக்கும் பாண்டியா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மித வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்திறன் இங்கிலாந்து பிட்சுகளில் நன்றாக எடுபடும் என்பதால் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவின் டிவிட்டர் பக்கத்தை மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஃபலோ செய்கிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *