இந்திய அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர். அவர் இளம் வயதிலேயே தனது அதிரடி ஆட்டத்திற்க்கு பெயர் போனவர். உள்ளூர் அரங்கிளும் எப்போதும் தனது அதிரடி ஆட்ட பாணியை தொடர்பவர்.

அந்த அதிரடி மன்னன் இதுவரை ஒரு ஓவரில் எத்தனை ரன் அடித்துள்ளார் என தெரியுமா?
பரோடா அணிக்காக விளையாடும் இந்த புயல் வீரன், உள்ளூர் டி20 போட்டியான சைத் முஸ்தாக் அலி ட்ராபியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் சூடான் பந்து வீச்சை பதம் பார்த்தார்.
அவர் வீசிய ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் மற்றும் 1 ஃபோர் என அந்த ஓவரில் 34 ரன் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 39 ரன்களை வாரி வழங்கினார் ஆகஷ் சூடான்.
இந்த அற்புத வீரன் பாண்ட்யாவின் திறமையை கண்டறிந்தது மும்பை அணியாகும். ஐபிஎல் இன் எட்டாவது பதிப்பு 2015 ஆம் ஆண்டு நடந்த போது முமபை அணிக்காக வங்கப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது அண்ணன் க்ருணால் பாண்ட்யாவை ஓப்பந்தம் செய்தது. அந்த ஐபிஎல் இல் முதல் போட்டியிலேயே பேட்டிங் ஃபீல்டிங் பவ்லிங் என அனைத்திலும் தனது திறமையை வெளிபடுத்திய பாண்ட்யாவை அப்படியே பிடித்துக் கொண்டது மும்பை இந்தியன்ஸ். அவரை பினிஷிங் ஆல் ரவுண்டராக பயன்படுத்திக் கொண்டது மும்பை.
அந்த வீடியோ கீழே உள்ள இணைப்பில் :
https://youtu.be/DCcWeXCTq-E
தற்போது நடைபெற்று வரும் இந்தியா இலங்கை இடயேயான டெஸ்ட் போட்டியில் தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானர் என்பது குறிப்பிடத் தக்கது. அதிலும் தனது அமைதியான முகத்துடன் அதிரடியாக அரை சதம் கடந்தார் ஹர்திக் பாண்ட்யா.

பிசிசிஐ.டிவிக்காக புஜாராவும் ஹர்திக் பாண்டியாவும் கால்லே டெஸ்ட் போட்டி பற்றி கலந்துரையாடல் நிகழ்த்தினர். இதில் தன் அறிமுக டெஸ்ட் போட்டி அனுபவம் பற்றி ஹர்திக் பாண்டியா விவரித்தார்.
சிக்சர்கள் அடிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டுள்ள பாண்டியா, ஒருநாள் யுவராஜ் போல் 6 சிக்சர்களை ஒரே ஓவரில் அடிப்பது பற்றி யோசிப்பாரா என்று செடேஸ்வர் புஜாரா பாண்டியாவிடம் கேட்ட போது,
இது வரை ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடிப்பது பற்றி யோசிக்கவில்லை. 3 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்துள்ளேன். 4-வது சிக்சருக்குச் செல்லவில்லை காரணம் சூழ்நிலை அத்தகைய தேவையை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒருநாள் அப்படித்தான் ஆட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் 6 பந்துகளையும் சிக்சர்கள் அடிக்க நிச்சயம் முயற்சி செய்வேன் என்றார்.
கண்டிப்பாக இந்த அதிரடி மன்னனின் ஆசைகள் நிறைவேர நானும் வாழ்த்துவோம்.