இந்திய அணிக்கு எதிராக அடுத்த வாரம் தொடங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 ஆட்டங்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த டாம் லதாம், கோலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியத் தொடர் முடிந்தவுடன் அங்கிருந்து நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் நேப்பியரில் வரும் புதன்கிழமை நடக்கிறது.
இலங்கைக்கு எதிரான தொடரின் போது, லதாம், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தனர். இப்போது, அணிக்கு மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டன் கேன் வில்லியம்ஸன், டிரன்ட் போல்ட் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் வந்துள்ளனர்.
கடந்த 10 மாதங்களாகக் காயத்தால் அவதிப்பட்டு வந்த சான்ட்னர் முழுமையாக குணமடைந்துள்ளதால் அவர் அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், “ உலகக்கோப்பை, மற்றும் இந்தியாவை வெல்ல வேண்டும் என்ற இரு அடிப்படையான விஷயத்தை முன்வைத்து வலிமையான அணியைத் தேர்வு செய்துள்ளோம். உலகின் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள இந்திய அணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு ஆட்டம் இருக்கும். டாம், கோலின் ஆகியோ இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், இவர்கள் தங்களுக்குரிய பொறுப்புகளை உணர்ந்து விளையாடுவார்கள் “ எனத் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணி விவரம்:
கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டிரன்ட் போல்ட், டாக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன், மார்டின் கப்தில், மாட் ஹென்ரி, டாம் லதாம், கோலின் முன்ரோ, ஹென்ரி நிகோலஸ், மிட்ஷெல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர்
Breaking news : SC adjourns @bcci matter for next week. Court will appoint ombudsman only in next week hearing. So #Pandya and #KLRahul decision goes into further limbo. Now ruled out of New Zealand series. @BCCI @Wahcricketlive
— G. S. Vivek (@GSV1980) January 17, 2019