ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் ஆடுவது உறுதியாகவில்லை! 1

பெண்கள் தொடர்பாக அநாகரிகமாக கருத்து தெரிவித்து இருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் உலக கோப்பை தொடரில் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை. ஏனெனில் பிசிசிஐ அமைத்த கமிட்டியில் இவர் இருவரும் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும். ஏப்ரல் 9 மற்றும் 10ம் தேதிகளில் இருவரும் விளக்கம் கொடுத்தனர். இன்னும் அதற்கு தீர்ப்பு வராததால் இருவரும் உலக கோப்பை தொடரில் ஆடுவது இன்னும் உறுதியாகவில்லை.

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகக்குழு பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், தொடக்க வீரர் கே.எல்.ராகுலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்தும், இனவெறியைத் தூண்டும் வகையிலும் பதிலளித்தனர். இதனால், கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து, தனது தவறுக்கு ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில், இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடவடிக்கை எடுத்தது.ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் ஆடுவது உறுதியாகவில்லை! 2

த்துடன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் அணியில் நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் உடனடியாக நாடு திரும்பினர். இந்த தடையால் பாண்டியா தனது ஸ்பான்சரையும் பறிகொடுத்தார்.

இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு பாண்டியா, ராகுல் மீதான தடையை நீக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகக்குழுவுக்கு பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா வலியுறுத்தியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “அவர்கள் தவறு செய்ததற்காக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டனர். தவறுக்காக அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர். இந்த விவகாரத்தை முடித்துக்கொண்டு இருவரையும் உடனடியாக நியூசிலாந்து தொடரில் சேர்க்க பரிந்துரை செய்கிறேன்” என்று சி.கே.கண்ணா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயினிடம் இந்த விவகாரம் அனுப்பப்பட்டது. ஹர்திக் பாண்டியா, கே.எல்,ராகுல் ஆகிய இருவரிடமும் டி.கே. ஜெயின் விசாரணை நடத்தினார்.ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் ஆடுவது உறுதியாகவில்லை! 3

இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் குறைதீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயின் தனது முடிவை அறிவித்துள்ளார். அதை பிசிசிஐ தனது இணைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில்கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவர் மீதும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏற்கனவே இருவரும் சஸ்பெண்ட் எனும் தண்டனையை அனுபவித்துவிட்டனர், குறைதீர்ப்பு மையத்திடமும் இருவரும் தங்களின் தவறை உணர்ந்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிவிட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *