நியுஸிலாந்து டெஸ்ட் தொடரில் இவருக்கு இடமில்லை: பிசிசிஐ அறிவிப்பு 1

சிகிச்சைக்கு பின்னரும் முழு உடல் தகுதி பெறாத காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதன்பின் சிகிச்சை மேற்கொண்டு அணிக்கு திரும்பினா. ஆனாலும், முகுது வலி அவருக்கு தொடர்ந்து இருந்ததால் லண்டன் சென்று அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அவர் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவந்தார்.

நியுஸிலாந்து டெஸ்ட் தொடரில் இவருக்கு இடமில்லை: பிசிசிஐ அறிவிப்பு 2
India’s Hardik Pandya bowls during their third one day international cricket match against England at Eden Gardens in Kolkata, India, Sunday, Jan. 22, 2017. (AP Photo/Tsering Topgyal)

இதற்கிடையில், தற்போது அவருடைய உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியுடன் உள்ளாரா என்பதற்கான பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார்.

இதையடுத்து நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.நியுஸிலாந்து டெஸ்ட் தொடரில் இவருக்கு இடமில்லை: பிசிசிஐ அறிவிப்பு 3

கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ருத்ர பிரதாப் சிங், மதன் லால் மற்றும் சுல்க்‌ஷனா நாயக் ஆகியோரை பிசிசிஐ நியமனம் செய்துள்ளது. விரைவில் பணிக்காலம் முடிய உள்ள தேர்வுக்குழுவினர்களான எம்.எஸ்.கே பிரசாத் மற்றும் ககன் கோடா ஆகியோருக்கு பதிலாக புதிய தேர்வுக்குழுவினரை, தேர்வு செய்வதே கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் முதன்மை பணியாகும்.

கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு காலம் என்று என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இரட்டை ஆதாய பிரச்சினையில் கடந்த ஆண்டு கபில் தேவ் மற்றும் அன்ஷூமன் கேக்வாட் மற்றும் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் பதவி விலகியதையடுத்து, கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக யாரும் நியமனம் செய்யப்படாமல் இருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *