தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான தொடருக்காக கேப்டனாகிறார் ஹர்மன்ப்ரீத் கவூர்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இதில் பிப்ரவரி மாதம் 13ம் தேதி துவங்க உள்ள டி.20 தொடருக்கான இந்திய பெண்கள் அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக முன்னணி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவூர் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் மந்தனா துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது.
மேலும் ராதா யாதவ், நுசாத் பிரவீண் என்னும் இளம் வீராங்கனைகள் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். அதே போல் 163 பந்துகளில் இரட்டை சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இந்திய பெண்கள் அணி;
- ஹர்மன்ப்ரீத் (கேப்டன்), 2. மந்தனா (துணைக்கேப்டன்), 3. மிதாலி ராஜ், 4. வேதா கிருஷ்ணமூர்த்தி, 5. ஜெமிமா, 6. தீப்தி, 7. அனுஜா பாட்டீல், 8. தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), 9. பிரவீண் (விக்கெட் கீப்பர்). 10. பூணம் யாதவ், 11. கயாக்வாட், 12. ஜூலன், 13. ஷிகா பாண்டே, 14. பூஜா வாஸ்ட்ராகர், 15. ராதா யாதவ்.