மகளிர் கிரிக்கெட் போட்டியில் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்ற வீராங்கனை தான் ஹர்மான்ப்ரீட் கவுர் இவருக்கு தற்போது அர்ஜுனா விருந்து வழங்க கோரி இவரின் பெயரை பரிந்துரை செய்து உள்ளார்கள்.
மேலும் இந்திய அணியின் மிக சிறந்த டெஸ்ட் போட்டி வீரரான புஜாராவின் பெயரும் அர்ஜுனா விருந்து வழங்க கோரி பரிந்துரை செய்து உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் உடல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவின் பெயரும் அர்ஜுனா விருதிற்கு பரிந்துரை செய்து உள்ளார்கள்.
இவர்கள் இல்லாமல் இன்னும் 17 வீரர்களின் பெயரும் அர்ஜுனா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஹர்மான்ப்ரீட் கவுர் 2017 மகளிர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் 115 பந்துகளில் 171 ரன்கள் அடித்து அசத்தினார் இவரின் இந்த அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி இறுதி போட்டிக்கு சென்றது இருப்பினும் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் எதிர் பாராத விதமாக இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.
புஜாரா தற்போது இலங்கை அணிக்கு எதிராக தன்னுடைய 50வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார் டெஸ்ட் போட்டிகளில் புஜாராவை யாராலையும் முறியடிக்க முடியாது.
தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு ஊனமுற்றோர்கள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்.
இவர்களுக்கு விரைவில் அர்ஜுனா விருது வழங்க பட உள்ளது.