இந்தியன் பிரீமியர் லீக் 10வது தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை வீழ்த்தி 3வது முறையாக ஐபில் கோப்பையை வென்று அசத்தியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை பாராட்டினார் புனே அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா. அவர் பதிவிட்ட ட்வீட்டை இங்கே பாருங்கள்:
ஆச்சரியம் என்னவென்றால், இறுதி போட்டியில் புனே அணி தோற்றதற்காக அந்த அணியின் வீரர்களை குற்றம் சாட்டவில்லை முக்கியமாக தோனியை. இறுதி போட்டியில் தோனியின் விக்கெட் தான் புனே அணியின் தோல்விக்கு காரணம்.
அதன் பிறகும் புனே அணிக்கு வாய்ப்பு இருந்தது. கடைசி 2 ஓவரில் 21 ரன் தேவை பட்ட நிலையில், ஸ்மித் ஒரு சிக்ஸர் அடித்து விறுவிறுப்பை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் 11 ரன் தேவை பட்டை நிலையில், ஜான்சன் ஓவரில் ஒரு பவுண்டரி எடுத்து வெற்றியை பறித்து செல்ல நினைத்தார் மனோஜ் திவாரி.
ஆனால், அடுத்தடுத்த பந்துகளில் திவாரி மற்றும் ஸ்மித் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், டேனியல் கிறிஸ்டின் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது.
மும்பை அணி மூன்றாவது மும்பை இந்தியன்ஸ் அணி ஐபில் பட்டம் வென்றது. அந்த மூன்று முறையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாதான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.