சச்சினை விட இவர் சிறந்த வீரர், சம்பவம் செய்யக்கூடியவர்: புகழ் பாடும் ஸ்வான் 1

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வரலாற்றில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் யார் எனக் கேட்டால் கிரேம் ஸ்வான் என கண்ணை மூடிக் கொண்டு கூறலாம்.

அந்த சிறந்த சுழற் பந்துவீச்சாளர் தான் இந்திய டெஸ்ட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பற்றி புகழ்ந்து, பாராட்டி பேசி உள்ளார்.

ராகுல் டிராவிட் ஆட்டமிழக்கவே மாட்டார் என்றும், அவர் தன்னை 11 வயது சுழற் பந்துவீச்சாளர் போல உணர வைத்ததாக மனம் திறந்து கூறி உள்ளார்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக பந்துகளை சந்தித்த பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தான். அவரது அந்த சாதனையை முறியடிக்க இனி ஒரு வீரர் பிறந்து தான் வர வேண்டும் என ரசிகர்கள் பெருமையாக கூறுவார்கள். அந்த தலைசிறந்த பேட்ஸ்மேன் குறித்து கிரேம் ஸ்வான் வியந்து பேசி உள்ளார்.சச்சினை விட இவர் சிறந்த வீரர், சம்பவம் செய்யக்கூடியவர்: புகழ் பாடும் ஸ்வான் 2

சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே உருவாக்கி வந்த இங்கிலாந்து அணியில் எப்போதுமே சுழற் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறை தான். அதை தீர்த்து வைத்தவர் கிரேம் ஸ்வான். இங்கிலாந்து அணியில் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக 2013 வரை வலம் வந்தார்.

கிரேம் ஸ்வான் 66 டெஸ்ட் போட்டிகள், 79 ஒருநாள் போட்டிகள், 39 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மொத்தம் 410 சர்வதேச விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 2010 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் கூட அவர் இடம் பெற்று இருந்தார். 2013இல் அவர்
அந்த சிறந்த சுழற் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் ராகுல் டிராவிட் பற்றி கூறுகையில், அவருக்கு பந்து வீசுவது கடினமான காரியம். கவுன்டி போட்டிகளில் டிராவிட்டிற்கு பந்து வீசி இருந்ததாகவும், அவர் அப்போது ஆட்டமிழக்கவே மாட்டார் என்றும் கூறினார்.

சச்சினை விட இவர் சிறந்த வீரர், சம்பவம் செய்யக்கூடியவர்: புகழ் பாடும் ஸ்வான் 3
இது பற்றி அவர் ஸ்கைஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசி உள்ளார். “ராகுல் டிராவிட் என்னைப் பொறுத்தவரை பெரிய வீரர். கென்ட் அணிக்கு (கவுன்டி அணி) ஆடிய போது அவருக்கு பந்து வீசி உள்ளேன். அவர் நம்பவே முடியாத வீரர்.” என்றார் கிரேம் ஸ்வான்.

மேலும், “என் வாழ்வில் அவரை விட சிறந்த வீரரைப் பார்த்ததே இல்லை. கவுன்டி போட்டிகளில் அவர் ஆட்டமிழக்கவே மாட்டார். அதுதான் ராகுல் டிராவிட், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவர் என்னை 11 வயது சுழற் பந்துவீச்சாளர் போல நினைக்க வைத்தார்” என தான் டிராவிட்டை கண்டு மிரண்ட அனுபவத்தை கூறி உள்ளார்.

சச்சினை விட இவர் சிறந்த வீரர், சம்பவம் செய்யக்கூடியவர்: புகழ் பாடும் ஸ்வான் 4
இதில் மற்றொரு சுவாரஸ்ய சம்பவம் என்னவென்றால், கிரேம் ஸ்வான் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் தன் முதல் ஓவரிலேயே கௌதம் கம்பீர் மற்றும் ராகுல் டிராவிட் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், டிராவிட்டை வீழ்த்தியது மிகச் சிறந்த பந்து எனவும் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *