வெறும் நம்பிக்கைய மட்டும்  வச்சு ஒன்னுமே செய்ய முடியாது தம்பி… ஹர்திக் பாண்டியா குறித்து ஓபனாக பேசிய ஆடம் கில்கிறிஸ்ட் !!

ஹர்திக் பாண்டியா

வெறும் நம்பிக்கைய மட்டும்  வச்சு ஒன்னுமே செய்ய முடியாது தம்பி… ஹர்திக் பாண்டியா குறித்து ஓபனாக பேசிய ஆடம் கில்கிறிஸ்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா இல்லையா என முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல் தொடரிலேயே குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததோடு, இரண்டாவது தொடரில் குஜராத் அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்று தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபித்த ஹர்திக் பாண்டியாவை மும்பை  இந்தியன்ஸ் அணி மீண்டும் தனது அணிக்கே ட்ரேட் செய்தது.

குஜராத் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தனது அணியில் இணைத்து கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவை திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த திடீர் முடிவு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் சில வீரர்களும் தற்போது வரை ஹர்திக் பாண்டியாவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரை எதிர்கொண்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 6 போட்டியில் விளையாடி அதில் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற 4 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர்ச்சியான தோல்விகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்தும், ஹர்திக் பாண்டியாவிற்கு வலுத்து வரும் எதிர்ப்பு குறித்தான தங்களது கருத்துக்களையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ஹர்திக் பாண்டியா குறித்தும், மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட், ஹர்திக் பாண்டியாவின் பிட்னெஸ் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கில்கிறிஸ்ட் பேசுகையில், “ஹர்திக் பாண்டியா எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தன்னால் சமாளிக்க முடியும் என நம்புகிறார். நம்பிக்கை மட்டுமே ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் இருக்கும் ஒரே ஒரு பாசிட்டிவான விசயம். மற்றபடி அவரது பந்துவீச்சில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் தான் உள்ளாரா என்பதிலேயே எனக்கும் சந்தேகம் உள்ளது. அவரது செயல்பாடுகளையும் அவரது பந்துவீச்சையும் பார்க்கும் போது அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றே தோன்றுகிறது. முழு உடற்தகுதியுடன் இல்லாததால் தான் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.