இந்திய அணிக்கு யோ-யோ டெஸ்ட் போன்று.. பாகிஸ்தான் அணிக்கு புதிய பிட்னஸ் கெடுபிடிகள்! பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி 1

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிட தடை விதித்துள்ளார், புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள் ள மிஷ்பா உல் ஹக்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளராக முன்னாள் வீரர் மிஷ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கடும் உணவு கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இங்கிலாந் தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதி பற்றிய பிரச்னை எழுந்தது. இதையடுத் து இப்போதே உணவு கட்டுப்பாடுகளை, அவர் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணிக்கு யோ-யோ டெஸ்ட் போன்று.. பாகிஸ்தான் அணிக்கு புதிய பிட்னஸ் கெடுபிடிகள்! பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி 2

அதன்படி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு உணவு முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைதான் அவர்கள் சாப்பிட வேண்டும். அதில் பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்பிகியூ உணவு வகைகள், பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதே நடைமுறையை தேசிய அணிக்கும் கடைபிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘பாகிஸ்தான் வீரர்கள் உணவு முறையை சரியாக கடைபிடிப்பதில்லை. எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும் ஜங் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் மிஸ்பா உல் ஹக் ஒவ்வொரு வீரர்களிடமும் உடல் தகுதிக்காக, உணவு முறையை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு அதற்காக லாக் புக் ஒன்று பராமரிக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அதைப் பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகள் கூறியுள்ளனர்

இந்திய அணிக்கு யோ-யோ டெஸ்ட் போன்று.. பாகிஸ்தான் அணிக்கு புதிய பிட்னஸ் கெடுபிடிகள்! பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி 3
Pakistan captain Sarfraz Ahmed receives the ball during the ICC Champions Trophy match between India and Pakistan at Edgbaston in Birmingham, England, Sunday, June 4, 2017. (AP Photo/Rui Vieira)

சர்பராஸ் அகமது (கே), பாபர் அசாம் (து.கே), ஆபிட் அலி, அகமது ஷெஜாத், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இப்திகார் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், முகமது அமீர், முகமது ஹஸ்னைன் , முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷின்வாரி, மற்றும் வஹாப் ரியாஸ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *