இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 12 ஆம் தேதி பல்லகெலே வில் நடைபெருவதாக இருந்தது. இந்நேரத்தில் இலங்கையின் முன்னனி சுழற் பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் காயம் காரணமாக மூன்றவது டெஸ்ட் போட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
இச்செய்தி தொடரை இழந்த இலங்கை அணிக்கு பெருத்த பிண்ணடைவை ஏற்படுத்தி உள்ளது, அவ்வணியின் இரு சிறந்த வேகபந்து வீச்சாளர்கள் போட்டியில் இருந்து விழகி இருப்பது பெருத்த பின்னடைவை ஏற்ப்படுத்தியது. இலங்கை அணிக்கு நல்ல காலம் இல்லை போலும், அதற்கேற்றார் போல் இந்திய அணி அடுத்த்டுத்த டெஸ்ட் போட்டிகளில் 600+ ரன்களை குவித்தது, இலங்கைக்கு தலை வலியை ஏற்ப்படுத்தி உள்ளது.
நுவான் பிரதீப் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பந்து வீசிக்கொண்டிருக்கும் போது தனது பின் தொடை தசை பிடிப்பு காரணமாக கிடைத்த புதிய பந்தில் சரியாக 4 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்
ஏற்க்கனவே அந்த அணியின் ஆல் ரவுண்டர் அஷ்லே குனரத்னா, வேகப்பந்து வீச்சாளர்கள் சுரங்கா லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தொடரில் இருந்துவெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது . நான்காவது நாளான இன்றே இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது .
அதன் பின், எரியும் தீயில் எண்ணை ஊரற்றினார் போல ஆல் ரவுண்டர் அஸ்லே குணரத்னாவும் காயம் காரணமாக முன்னரே வெளியேறிய நிலையில், முதல் டெஸ்ட்டில் இலங்கையின் அனுபவம் வாய்ந்த சுழ்ற்ப்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் தனது இடது நடு விரலை காயப்படுத்தி கொண்டார்.
அவரை தொடர்ந்து சுரங்கா லக்மாலும் விழகியது இலங்கைக்கு பெரிய தலை வலியயை ஏற்ப்படுத்தி உள்ளது.
இருந்தாலும் இலங்கைக்கு உள்ள ஒரே ஆருதல் ஆனது அந்த அணி இனிமேல் தோற்பதற்க்கு எதுவும் இல்லை. எனவே அவர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எந்த கவலையும் இன்றி அவர்களுடைய முழு திறமையயும் வெளிபடுத்தி அந்த மூன்றாவது போட்டியிளாவது வென்று நாட்டிற்க்கு பெருமை சேர்க்கலாம்.