வரும் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டிகள் சென்னை-திருநெல்வேலி, திண்டுக்கல் மைதானங்களில் நடைபெறவுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. திருநெல்வேலி சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் மைதானம் என 3 மைதானங்களில் இத்தொடர் நடைபெறுகிறது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டுட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். மேலும் அவற்றின் பெயர்கள் முறையே ஐட்ரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டுட்டி பேட்ரியாட்ஸ் என மாற்றப்பட்டுள்ளன. வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் பெயர் விபி. காஞ்சி வீரன்ஸ் என அதன் உரிமையாளர் மாற்றியுள்ளார்.

திருநெல்வேலி, நத்தம் மைதானங்களில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடக்கின்றன. வார நாள்களில் இரவு 7.15 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15, மாலை 7.15-க்கும் ஆட்டங்கள் தொடங்கும்.
மூன்றாவது சீசன் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசாக ரூ. 1 கோடி தரப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 60 லட்சம், மூன்று மற்றும் நான்காவது அணிகளுக்கு தலா ரூ. 40 லட்சமும், மீதமுள்ள 4 அணிகளுக்கு தலா ரூ. 25 லட்சமும் ரொக்கமாகத் தரப்படும். தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸைத் தோற்கடித்தது. இதன்மூலம் 2016-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் தூத்துக்குடி அணியிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது சூப்பர் கில்லீஸ்.
இந்த வருட டிஎன்பிஎல் போட்டியின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஆகிய தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் டிஎன்பிஎல் போட்டிக்கான தமிழ் வர்ணைக்குப் புதிய வர்ணையாளர்களைத் தேர்வு செய்யவுள்ளார்கள். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் வர்ணனை செய்ய ஆர்வமாக இருப்பவர்கள், தங்களுடைய 2 நிமிட விடியோவை @StarSportsIndia @TNPremierLeague ஆகிய ட்விட்டர் கணக்குகளிடம் பகிரவேண்டும். கூடவே #MICUPFORTNPL என்கிற ஹேஷ்டேகையும் பயன்படுத்த வேண்டும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு