வீடியோ: ஒரே ஆட்டத்தில் 17 சிக்ஸர்.. ரசிட் கானின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்!! இயான் மார்கனின் காட்டடி ஹைலட்ஸ் வீடியோ! 1

ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய  இங்கிலாந்து 397/6 ரன்களை குவித்தது.  பின்னர் ஆடிய ஆப்கன் 247/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஆப்கன் பந்துவீச்சை பதம் பார்த்த மார்கன் 17 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 71 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஓர் ஆட்டத்தில் 17 சிக்ஸர் அடித்தவர் என்கிற பெருமையைப் பெற்றார் இயன் மார்கன். அதேபோல இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸில் 25 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதுவும் உலக சாதனைதான். ஆப்கன் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிகபட்சமாக 9 ஓவர்களில் 110 ரன்களை வாரி வழங்கினார். உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைக் கொடுத்தவர் என்கிற நிலைக்கு ஆளாகியுள்ளார் ரஷித் கான்.

 

 

17 சிக்ஸர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் மொத்தம் 17 சிக்ஸர்கள், 4  பவுண்டரிகள் அடங்கும். ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிகமான சிக்ஸர் அடித்த வீரர் எனும் புதிய சாதனையை மோர்கன் படைத்தார்.

இதற்கு முன் ஒரு இன்னிங்ஸில் 16 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா, கெயில், டிவில்லியர்ஸ் சாதனை படைத்திருந்தனர். அதை மோர்கன் முறியடித்தார்.  அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் மோர்கன் தனிப்பட்ட முறையில் 210 சிக்ஸர்களை அடித்து அதிக சிஸ்கர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 6-து இடத்தில் உள்ளார்.வீடியோ: ஒரே ஆட்டத்தில் 17 சிக்ஸர்.. ரசிட் கானின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்!! இயான் மார்கனின் காட்டடி ஹைலட்ஸ் வீடியோ! 2

4-வது அதிவேக சதம்

உலகக் கோப்பைப் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 57 பந்துகளில் சதம் அடித்து 4-வது இடத்தை மோர்கன் பிடித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்ததே இன்று அதிவேக சதமாக இருந்து வருகிறது. மோர்கனுக்கு ஒருநாள் அரங்கில் இது 13-வது சதம் மற்றும் உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சதமாகும்.வீடியோ: ஒரே ஆட்டத்தில் 17 சிக்ஸர்.. ரசிட் கானின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்!! இயான் மார்கனின் காட்டடி ஹைலட்ஸ் வீடியோ! 3

25 சிக்ஸர்கள்

இங்கிலாந்து அணி இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 25 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தது. இதற்கு முன் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள் அடித்து சாதனை வைத்திருந்த இங்கிலாந்து அதை முறியடித்துள்ளது. மேலும் உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 22 சிக்ஸர்கள் அடித்திருந்தது, அதை இந்த ஆட்டத்தில் 25 சிக்ஸர்கள் அடித்து முறியடித்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *