இதெல்லாம் சும்மா… இனிமே தான எங்களோட முழு ஆட்டத்த பாக்கபோறீங்க – ராகுல் டிராவிட்!

இந்திய அணியின் இன்னொரு ரூபத்தை ஜனவரி மாதத்தில் இருந்து பார்க்க போகிறீர்கள் என பேட்டியளித்து இருக்கிறார் ராகுல் டிராவிட்.

சர்வதேச போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. டி20 உலககோப்பை தொடரை இழந்ததிலிருந்து இந்திய அணி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.

நியூசிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் தொடரை மோசமாக இழந்தது. அடுத்ததாக தற்போது வங்கதேச அணியுடன் நடந்த ஒருநாள் தொடரையும் இழந்திருக்கிறது.

எளிதாக வெல்லக்கூடிய வங்கதேச அணியுடனான தொடரை இழந்ததால் பிசிசிஐ சற்று அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

நியூசிலாந்து தொடரில் முன்னணி வீரர்கள் இல்லை. ஆகையால் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. தற்போது வங்கதேச அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் முன்னணி வீரர்கள் பலரும் அணியில் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றதால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கிறது. வங்கதேச மைதானம் இந்தியாவின் மைதானத்தை போலவே இருக்கும். அங்கு இந்திய அணி தோல்வியுற்றதால் தற்போது சிக்கலாக இருக்கிறது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது? இனிவரும் போட்டிகளை எப்படி எதிர்கொள்வோம்? என்று சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ராகுல் டிராவிட். அவர் கூறுகையில்,

“2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளும் டி20 உலககோப்பை நடந்தது. டி20 உலககோப்பைக்காக இந்திய வீரர்கள் தயாராகி வந்தனர். ஆகையால் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த தவறிவிட்டனர். ஆகையால் தற்போது ஒருநாள் தொடரில் திணறுகின்றனர். உடனடியாக அதற்கு ஏற்றவாறு ரியாக்ட் செய்ய முடியவில்லை.

நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை இழந்தது முற்றிலும் வானிலை காரணமாகத் தான். ஆனால் வங்கதேச தொடர் எங்கள் தவறு தான். இதிலிருந்து சரி செய்து கொண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முழுக்க முழுக்க உலக கோப்பைக்கு ஏற்றவாறு தயாராவோம். இனி தவறுகள் நடக்காது. நானும் ரோகித் சர்மாவும் இதற்கு பொறுப்பேற்று கொள்கிறோம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.