மைதானத்தில் இறங்கிவிட்டால் ஈவு இரக்கம் பார்க்காமல் தாறுமாறாக பேட்டிங் செய்வேன் என்று இந்தியாவின் வேகப்பந்து ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உள்ளார். இவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது கிரிக்கெட் மைதானத்தில் நான் இரக்கமற்ற கொடூரமான வீரர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘மைதானத்திற்குள் வந்துவிட்டால் என்னுடைய போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். ஈவு இரக்கம் பார்க்காமல் அதிரடியாக விளையாடவே விரும்புவேன்.
என்னுடைய மோதலுக்கு தயாரானால், பின் வங்கமாட்டேன். நான் பந்து வீசும்போது மாறுபட்ட நபர். அதேபோல் பேட்டிங் செய்யும்போது மாறுபட்ட நபர். நான் அதிக அளவில் வெளிப்பாட்டை காட்டமாட்டேன். அதிக அளவில் சிரிக்க மாட்டேன். பந்து வீசும்போது சிரிப்பது, நான் மோதலில் ஈடுபடுவது, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது எல்லாமே இயற்கையாக வருவது’’ என்றார்.