நீ எப்படியோ பந்து வீசு, ஆனா கண்டிப்பா இதை செய்; ஷேன் வார்னே கூறியரகசியத்தை வெளியிட்ட குல்தீப் யாதவ் !!

உன் முகத்தில் புன்னகையை தான் பார்க்க வேண்டும் என்று ஷேன் வார்னே கூறியதாக குல்தீப் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்விற்குப் பிறகு இவருடைய பந்துவீச்சு எக்ஸ்பைரி ஆகிவிட்டது என்ற கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான குல்தீப் யாதவ்,உண்மையில் தோனி ஓய்வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை.

 

 

இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து சிறப்பாக பந்துவீசி உள்ளார்.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்தத் தொடர் குல்தீப் யாதவிர்க்கு வாழ்வா சாவா என்பது போன்ற முக்கியமான ஒரு தொடர் ஆகும், ஒருவேளை இந்த தொடரில் குல்தீப் யாதவால் சிறப்பாக பந்து வீச முடியாமல் போனால், அவருடைய கிரிக்கெட் கரியர் இத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யார் விமர்சிப்பதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத குல்தீப் யாதவ், தன்னுடைய கிரிக்கெட் கரியரில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வருகிறார்.

அந்தவகையில் 2019ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே தன்னிடம் கூறிய விஷயத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னேவை சந்தித்தேன்,அவர் என்னுடைய தோளில் கை வைத்து நான் வர்ணனையாளர் பெட்டியில் இருந்து உன்னை கவனிப்பேன், உன் முகத்தில் சிரிப்பை தான் நான் பார்க்க வேண்டும், நீ எப்படி பந்து வீசுகிறாய் என்பதெல்லாம் எனக்கு தேவை கிடையாது, ஆனால் உன் முகத்தில் நான் சிரிப்பை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் நான் அந்த போட்டி முழுவதும் மிகவும் பாசிட்டிவாக சிரித்த முகத்துடன் இருந்தேன், மேலும் அந்த போட்டியில் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது அந்த போட்டியில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவருக்காக டெடிகேட் செய்தேன், அவர் என்னுடைய மிகப்பெரிய குரு என்று குல்தீப் யாதவ் பேசியிருந்தார். மேலும் பேசிய குல்தீப், ஷேன் வார்னே வர்ணனையாளர் இடத்தில் அமர்ந்திருந்தார், அப்பொழுது நான் 5 விக்கெட்களை வீழ்த்திருந்தேன் அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு நிகழ்வாக இருந்தது, நான் ஷேன் வார்னேவின் விளையாட்டை பார்த்து நிறைய கற்று உள்ளேன் என்று குல்தீப் யாதவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

 

 

Mohamed:

This website uses cookies.