விராட் கோலியின் நடத்தை தற்போது தனக்கு பிடிக்கவில்லை மைக் ஹஸி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 123 ரன்கள் குவித்தார். 75-வது டெஸ்டில் 127-வது இன்னிங்சில் அவர் தனது 25-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்டில் அதிவேகத்தில் 25-வது செஞ்சூரியை பிராட்மேனுக்கு பிறகு அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
தெண்டுல்கர் 130 இன்னிங்சிலும், கவாஸ்கர் 138 இன்னிங்சிலும், ஹெய்டன் 134 இன்னிங்சிலும் 25 சதங்களை எடுத்து இருந்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் கோலி 6-வது செஞ்சூரி அடித்து தெண்டுல்கரை சமன் செய்தார்.
இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டிங்கை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். தெண்டுல்கர், லாரா, ரிக்கி பாண்டிங்கை விட கோலி சிறந்த வீரர் என்ற புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக வாகன் கூறியதாவது:-
விராட் கோலியை போன்ற சிறந்த வீரரை நான் பார்த்தது இல்லை. அதே நேரத்தில் தெண்டுல்கர், லாரா, ரிக்கி பாண்டிங் ஆகியோரை நான் அவமதிக்கவில்லை. ஆனால் கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கோலியே சிறந்த வீரர். அவரைவிட சிறந்த பேட்ஸ்மேனை நான் பார்த்தது கிடையாது.
நெருக்கடியான நேரத்தில் கையாள்வதில் விராட் கோலி உயர்ந்த திறமையையும், நம்ப முடியாத மனநிலையையும் கொண்டிருக்கிறார். சச்சின் மீது இருந்த எதிர்பார்ப்பு அப்படியே அவரிடம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் விராட் கோலியை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டரும் பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, “லாரா, பாண்டிங், தெண்டுல்கர் ஆகியோரது அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார். தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி இந்த 3 பேரையும் விட கோலி சிறந்த வீரர் அல்லது சமமானவராக கருதுகிறேன்” என்றார்.
இந்த ஆண்டில் விராட் கோலி டெஸ்டில் இதுவரை 1223 ரன் எடுத்துள்ளார். சராசரி 58.23 ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக அவரது டெஸ்ட் சராசரி கிட்டத்தட்ட 70 வரை உள்ளது. இதே காலக்கட்டத்தில் ஒருநாள் போட்டியில் அவரது சராசரி 94.47 ஆகும்.இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70 ரன்கள் சேர்த்தனர். இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா 72 ரன்கள் சேர்த்தார். முகமது ஷமி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 287 என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸில் களமிறங்கி இந்திய அணி தடுமாறி வருகிறது. 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ராகுல் 0, முரளி விஜய் 20, புஜாரா 4, விராட் கோலி 17 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.